சொகுசு கார் வழக்கில் நடிகர் ஃபகத் ஃபாசில் கைதாகி விடுதலை..!

போலி வீட்டு ரசீது மூலம் சொகுசு கார் வாங்கிய வழக்கில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் கைது செய்யப்பட்டு பிறகு, விடுதலை செய்யப்பட்டார். 

புதுச்சேரி மாநிலத்திலுள்ள வீட்டு முகவரியில் போலியாக ஆவணங்கள் அளித்து சொகுசு கார்கள் வாங்கி கேரள மாநிலத்தில் பயன்படுத்துவதாகப் ஃபகத் ஃபாசில் மற்றும் அமலாபால் மீது அந்த மாநிலக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, பா.ஜ.க எம்.பி-யும் சினிமா நடிகருமான சுரேஷ் கோபி மீதும் இதே விவகாரத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் கேரள மாநில சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், ஃபகத் ஃபாசிலை, கேரள மாநிலக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம், வாக்குமூலம் பெற்றபின், அவரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர். அதேபோல நடிகை அமலாபாலும் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!