வெளியிடப்பட்ட நேரம்: 04:04 (27/12/2017)

கடைசி தொடர்பு:07:30 (27/12/2017)

பிரபலங்கள் கலந்துகொண்ட விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா வரவேற்பு நிகழ்ச்சி..!

இந்திய அணியின் கேப்டன் விராட் ஹோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இணையின் திருமணம் டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையின் லொவர் பேரல் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் பாலிவுட் நட்சத்திரங்களும், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் என பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விராட் ஹோலி

விழாவில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான் ஆகியோர் கலந்துகொண்டனர். அபிஷேக்பச்சன் அவரது மனைவி ஐஸ்வர்யா ராயுடன் கலந்துகொண்டார். பாலிவுட் திரைப்பட இயக்குநர்களான ராஜ்குமார் ஹிரானி, அனுராக் காஷ்யப்  உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி மற்றும் மகளுடன் விழாவில் கலந்துகொண்டார். சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னால் கிரிகெட் வீரர்கள் விழாவில் பங்கேற்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவியுடன் விழாவுக்கு வருகை புரிந்தார். தோனி, ஜடேஜா, உமேஷ் யாதவ் உள்ளிட்ட இந்திய அணியின் கிரிகெட் வீரர்களும் விழாவில் கலந்துகொண்டனர்.

விராட் ஹோலி

விராட் ஹோலிவிராட் ஹோலி