சினிமா
Published:Updated:

தீபாவளி ரங்கோலி!

க.நாகப்பன்படங்கள்: ஜெ.தான்யராஜு, அ.ரஞ்சித்

வண்ணத் திரையில் தினமும் ஹோலி கொண்டாடும் பட்டாம்பூச்சிகள், தீபாவளிக்கு என்ன காஸ்ட்யூம் வாங்கப் போகிறார்களாம்... விசாரித்தேன்!

கல்பனா, ராஜ் மியூஸிக்.

தீபாவளி ரங்கோலி!

''ஜீன்ஸ், டாப்ஸ், சுடிதார்னா எனக்கு ரொம்ப்ப்ப்ப்ப இஷ்டம். எப்பவும் ஷாப்பர்ஸ் ஷாப்தான் நம்ம காஸ்ட்யூம் ஷாப். இந்த தீபாவளிக்கு பிங்க், கறுப்பு கலர்களில் ரெண்டு டாப்ஸ், ஜீன்ஸ் எடுக்கலாம்னு ஐடியா. அப்புறம் ஃப்ரெண்ட்ஸை அழைச்சுட்டுப் போய், அன்பு இல்லத்தில் குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடப்போறேன்!''

ஜனனி ஐயர்

தீபாவளி ரங்கோலி!

''சொந்தக்காரர் ஒருத்தர் இறந்துட்டதால, போன வருஷம் தீபாவளியைக் கொண்டாட முடியலை. அதனால், இந்த வருஷம் எனக்கு டபுள் தீபாவளி. பெங்களூர்ல ஜீன்ஸ் - டாப்ஸ் வாங்கிட்டேன். ஆனா, என் தங்கச்சி கிருத்திகா 'அழகா இருக்குக்கா... நான் எடுத்துக்கவா?’னு ஆசையாக் கேட்டதால், அவளுக்குக் கொடுத்துட்டேன். பதிலுக்கு சர்ப்ரைஸா எனக்கு ஒரு ரெட் கலர் ஃப்ராக் வாங்கிக் கொடுத்து அசத்திட்டா கிருத்திகா. ஸோ லவ்லி சிஸ்டர்!''

அனுஜா ஐயர்

தீபாவளி ரங்கோலி!

''திருமணம், திருவிழானு எந்த சீஸனா இருந்தாலும், என் ஃபேவரைட் புடவைதான். என் ஃப்ரெண்ட் அனிருத் காஸ்ட்யூம் டிசைனர். எனக்கு எது செட் ஆகும்னு பார்த்துப் பார்த்து டிசைன் பண்ணுவார். டார்க் ரெட், அக்வா ப்ளூ, லெமன் யெல்லோ கலர்தான் எனக்கு மேட்ச் ஆகும். இந்த தீபாவளிக்கு பட்டுப்புடவைதான். பார்டர்ல கலம்கரி பேட்ச் வெச்சுத் தைச்சிருக்கிற பட்டுப்புடவை எடுத்திருக்கேன். புதுசு புதுசா என்ன ஃபேஷன் வந்தாலும் புடவையோட கிராண்ட் லுக் எதிலும் வராது!''  

பிரியங்கா, எஸ்.எஸ்.மியூஸிக்

தீபாவளி ரங்கோலி!

''வித்தியாசமான கலரா இருந்தா உடனே நான் எடுத்துருவேன். சல்வார், டி-ஷர்ட், ஸ்கர்ட்னு இந்த தீபாவளிக்கு மூணு டிரெஸ். பிளாட்ஃபாரக் கடையில ஆரம்பிச்சு, ஸ்டைல் பொட்டிக்ஸ்,  எக்ஸ்பிரஸ் அவென்யூனு தேடித் தேடி வாங்குவேன். இப்போ என் ஃப்ரெண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் எல்லாருக்கும் நான்தான் காஸ்ட்யூம் அட்வைஸர்!''

அர்ச்சனா கவி

தீபாவளி ரங்கோலி!

''ஸ்கூல், காலேஜ்ல படிக்கும்போது எப்பவும் எனக்கு அச்சன்தான் டிரெஸ் செலெக்ட் பண்ணும். இப்போ அம்மைக்கும் அச்சனுக்கும் நான்தான் டிரெஸ் எடுத்துக் கொடுக்குறேன். தீபாவளிக்கு ஸ்கர்ட் ஒண்ணும் நார்த் இண்டியன் பேட்டர்ன்ல ஒரு டிரெஸ்ஸும் எடுத்தேன். ஏழாயிரம் ரூபாய்... கொஞ்சமே கொஞ்சம் காஸ்ட்லிதானோ?!''  

'இளவரசி’ சந்தோஷி

தீபாவளி ரங்கோலி!

''ரொம்ப வருஷம் காத்திருந்து ஆசைப்பட்டு இந்த தீபாவளிக்கு சேலை வாங்கிட்டேனே! விஜயவாடாவில் வாங்கின சேலை. ஷூட்டிங்குக்குனு இல்லாம பெர்சனலா முதல்முறையா இப்பதான் சேலை கட்டப்போறேன்!''

கங்கா, ராஜ் டி.வி.

தீபாவளி ரங்கோலி!

''ஒரே நாள்ல தீபாவளி ஷாப்பிங் முடிக்க முடியாது. அதனால, தீபாவளிக்கு ஒரு மாசம் முன்னாடியே ஷாப்பிங் ஆரம்பிச்சுட்டேன். 2,000 ரூபாய்க்கு ஒரு ஸ்கர்ட், 800 ரூபாய்க்கு ஒரு டி-ஷர்ட், 700 ரூபாய்க்கு குர்தீஸ்னு பாதி பர்ச்சேஸ் முடிஞ்சிருக்கு. இதுக்கெல்லாம் மேட்சிங் அயிட்டம்ஸ் இனிமே வாங்கணும். கோயிலுக்கு ஒண்ணு, பட்டாசு வெடிக்க ஒண்ணு, ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு ஒண்ணுன்னு இந்த வருஷ தீபாவளியைப் பிரிச்சு மேயப்போறேன்!''

'கனா காணும் காலங்கள்’ ஹரிப்பிரியா

தீபாவளி ரங்கோலி!

''ஏற்கெனவே என் கலெக்ஷன்ல தாவணி, புடவைனு டிரெடிஷனல் டிரெஸஸ் நிறையவே இருக்கு. அதனால, இந்தத் தடவை 2,500 ரூபாய்க்கு காக்ரா சோளி எடுத்தேன். கல் பதிச்சு செம லுக்கா இருக்கும். இன்னொரு முக்கியமான விஷயம்... க்ரீன், ரெட், பிங்க்னு டார்க் ஷேட்ல எல்லா டிரெஸ் ஸும் எனக்கு நல்லா இருக்கும். அதனால, எனக்குப் பரிசு கொடுக்க ஆசைப்படுறவங்க அந்த கலர்லயே டிரெஸ் எடுத்துக்கொடுங்க!''

ரேஷ்மி

தீபாவளி ரங்கோலி!

''சினிமா ஷூட்டிங்ல பிஸியா இருந்தாலும், மால் மாலா ஏறி இறங்கி ப்ளாக் அண்ட் ஒயிட், பர்ப்பிள் கலர்ல நாலு செட் டிரெஸ் எடுத்திருக்கேன். பட்ஜெட் 15 ஆயிரத்தைத் தாண்டிருச்சு. தேடித் தேடி எடுத்ததுல காஸ்ட்யூம் சென்ஸ் சம்பந்தமா நிறையக் கத்துக்கிட்டேன். இனி, என் ஃப்ரெண்ட் ஸுக்கும் நான்தான் காஸ்ட்யூம் டிசைனர்!''