வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (01/01/2018)

கடைசி தொடர்பு:12:47 (02/01/2018)

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் `மதுரவீரன்' படத்தின் ட்ரெய்லர்!

மதுரவீரன் படத்தின் போஸ்டர்

‘சகாப்தம்’ திரைப்படத்துக்குப் பிறகு விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் திரைப்படம் ‘மதுரவீரன்’. இந்தப் படத்தை ‘பூ’, ‘ராஜா மந்திரி’ போன்ற பல படங்களின் ஒளிப்பதிவாளரான பி.ஜி.முத்தையா இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

 

 

 

மீனாட்சி, சமுத்திரக்கனி, வேல. ராமமூர்த்தி, மைம் கோபி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், மாரிமுத்து, தேனப்பன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. பொங்கலுக்கு இந்தப் படம் திரைக்கு வருகிறது.