துணிச்சல்காரி, அட்டகாச ஆட்டக்காரி, திறமை தேவதை...பாலிவுட்டின் நயன்தாரா...தீபிகா! #HappyBirthdayDeepikaPadukone #VikatanPhotoStory

தீபிகா

பாலிவுட் அழகி தீபிகா படுகோனுக்கு இன்று பிறந்தநாள். ஒரு நடிகை என்பதைத் தாண்டி, அவரின் தனித்துவமான சில பண்புகள்தாம், 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரை முன்னணி நடிகையாக வைத்திருக்கிறது. சினிமா வாழ்க்கையில் சந்தித்த சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் கையாளும் விதம், நடிப்புத் தொழிலில் காட்டும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால், பாலிவுட்டின் நயன்தாரா என்றே கூறலாம். பர்த்டே பேபி தீபிகா படுகோன் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்சியமான விஷயங்கள்... 

தீபிகா

இவர் முதன்முதலில் நடிகையாக அறிமுகமானது, ‘ஐஸ்வர்யா’ என்ற கன்னட படத்தில். தெலுங்கில் செம்ம ஹிட் அடித்த, 'மன்மதடு' படத்தின் ரீமேக்தான் அது. ஐஸ்வர்யாவாக நடித்த தீபிகாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தீபிகா

2007-ம் ஆண்டு, 'பாலிவுட் பாட்ஷா' ஷாரூக்கானுடன் பாலிவுட்டில் அறிமுகமானார் தீபிகா படுகோன். 'ஓம் சாந்தி ஓம்' என்ற அந்தப் படத்தில், சாந்தி ப்ரியா என்ற கேரக்டரில் நடித்தவரை, 'பாலிவுட்டில் முதல் படமா இது?' என்று ஆச்சர்யமாக கேட்கும் அளவுக்கு நடிப்பில் அசத்தியிருந்தார். 

சாக்லேட்

குக்கீஸ், சாக்லேட், ஐஸ்கீரிம்கள் என்றால் தீபிகாவுக்கு உயிர். தான் சாப்பிடும் சாக்லேட், டேசர்ட்ஸ் (Desserts) ஆகியவற்றை இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவுசெய்வது இவரின் பழக்கம். 

பத்மாவதி

PC: instagram.com/yasminkarachiwala

சாக்லேட் காதல் ஒருபுறம் இருந்தாலும், உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள தவறுவதில்லை. தீபிகாவின் உயரம்தான் அவரின் ஸ்பெஷாலிட்டி. “நான் தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருப்பதால், தினமும் வொர்க் அவுட் செய்ய முடியாது. நேரம் கிடைக்கும்போது செய்வேன். ஆனால், ஒருநாளும் யோகா செய்யாமல் இருந்ததில்லை” என்று தன் ஃபீட்னஸ் சீக்ரெட்டை பகிர்ந்துள்ளார். 

பத்மாவதி

‘ஐஸ்வர்யா’ திரைப்படத்தின் இயக்குநர் இந்திரஜித் லங்கேஷா, இவரைப் பற்றி ஒருமுறை கூறுகையில், “பொதுவெளியில் இவர் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் விதம் வியப்பை அளிக்கும். அவரின் திரைப்படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகாவிட்டாலும், அவரைப் பற்றி ஊடகங்கள் பேசும். அதுதான் அவரின் தனித்துவம்” என்கிறார். அது உண்மை. 2015-ம் ஆண்டு, வெளியான ‘பாஜிரோ மஸ்தானி' படம்தான், இவர் நடித்து வெளியான கடைசி படம். அதன்பிறகு, 'பத்மாவதி' வெளியாகப்போகிறது. ஆனால், இந்த இரண்டு வருடங்களில் ஊடகத்தில் இவர் இல்லாத நாளே இல்லை எனலாம். 

ஐஸ்வர்யா

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து, கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். அப்போது, இவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பல கிசுகிசுக்கள் எழுந்தன. “அவர் என்னைப் பலமுறை ஏமாற்றியிருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால், அவருக்கு ‘காண்டம்’ பரிசு அளிப்பேன்” என்று அதிரடியாகக் கூறினார். அதன்பிறகு, ஒரு நடிகையாக மீண்டும் ரன்பீர் கபூருடன் 'ஹே திவானி ஹே ஜவானி', 'தமாஷா' என இரண்டு படங்களில் நடித்தார். 'முன்னாள் காதலனுடன் எப்படி நடிக்கச் சம்மதித்தீர்கள்?' என்று கேட்டதற்கு, “பர்சனல் வேறு, வேலை வேறு” என்று பர்ஃபெக்ட் ரீப்ளே கொடுத்தார் தீபிகா. 

தீபிகா

தீபிகாவுக்கு நடனம் கைவந்த கலை. வெஸ்டர்னாலும் சரி, இந்திய நடனமானாலும் சரி, அட்டகாசமாக ஆடி அசத்துவார். 'கோலியான் கி ராஸ்லீலா ராம்லீலா' என்ற படத்தில், 'நகடா சங் தோல்' என்ற பாடலுக்கு இவர் நடனமாடியதும், 'பத்மாவதி' திரைப்படத்தில் 'கோமார்' என்ற பாடலுக்கு ஆடியிருக்கும் நடனமும் இவரின் திறமைக்கு உதாரணங்கள். 

தீபிகா

 மனஅழுத்தம் பற்றி வெளிப்படையாகப் பேசிய முதல் நடிகை இவர்தான். “2014-ம் ஆண்டு மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். என் குடும்பமும் நண்பர்களும் உறுதுணையாக இருந்ததால், அதிலிருந்து மீண்டேன்” என்று கூறியிருக்கிறார். தி லைவ் லாங் ஃபவுண்டேஷன் (The Live Long Foundation) என்ற தன்னார்வ அமைப்பை 2015-ம் ஆண்டு தொடங்கி, மனஅழுத்தம் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

பத்மாவதி

‘பத்மாவதி’ படத்தை வெளியிடக்கூடாது என ராஜ்புத் சமூகத்தினர் தொடர்ந்து மிரட்டிக்கொண்டிருக்கும்போது, தன் சமூகவலைதளம் பக்கத்தில் அந்தப் படத்தின் போஸ்டரையே புரோபைல் போட்டோவாக வைத்திருக்கிறார். 

பத்மாவதி

 பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன், 2010-ம் ஆண்டு முதல் காதலில்  இருக்கிறார் தீபிகா. இதனை இருவரும் வெளிப்படையாகப் பேசவிட்டாலும், பொதுநிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகவே வருகிறார்கள். தற்போது 32 வயதாகும் தீபிகா, தன் பிறந்தநாளை ரன்வீர் சிங்குடன் இலங்கையில் கொண்டாடுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!