வெளியிடப்பட்ட நேரம்: 08:11 (08/01/2018)

கடைசி தொடர்பு:08:30 (08/01/2018)

ஆக்கபூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன..! ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை

'இயக்க உறுப்பினர்கள், கலந்து ஆலோசிக்காமல் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டாம்' என்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனந்த விகடனில் நடிகர் கமல்ஹாசன் எழுதும் 'என்னுள் மையம் கொண்ட புயல்' தொடரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றிபெற்றதைக் கடுமையாக விமர்சித்தார். அதற்கு டி.டி.வி.தினகரன் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். மேலும், அவரது ஆதரவாளர், ஒரு சில இடங்களில் கமலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கமலின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக நேற்று  சில இடங்களில் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து கமல் ட்விட்டர் பதிவில், 'கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாகாது. விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் நிலையை தலைமைக்குத் தயவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்கபூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன' என்று பதிவிட்டுள்ளார்.