சிக்கிம் மாநில விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்..!

சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதராக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அம்மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிக்கிம் மாநிலத் தலைநகர் காங்டாக்கில், குளிர்காலத் திருவிழா நேற்று தொடங்கியது. அம்மாநில முதலமைச்சர் பவன்குமார் சாம்லிங் தலைமையில் தொடங்கிய அந்த விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார். விழாவில் பேசிய முதல்வர் சாம்லிங், 'சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மானை நியமிப்பதற்கு விருப்பம் தெரிவித்தார். அதை ரஹ்மான் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, ரஹ்மானுக்கு சாம்லிங் நன்றி தெரிவித்தார். அந்த விழாவில் பேசிய ரஹ்மான், 'சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதராக என்னை நியமித்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். அதற்கு நன்றி. சகிப்புத்தன்மை, இரக்கம், அமைதி, சமூக நல்லிணக்கத்துக்கு சிக்கிம் மாநிலம் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!