வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (14/01/2018)

கடைசி தொடர்பு:00:00 (14/01/2018)

பாலா இயக்கத்தில் வெளிவரப்போகும் `நாச்சியார்' படத்தின் ட்ரெய்லர்!

நாச்சியார் பட போஸ்டர்

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஜ் நடிப்பில் விரைவில் திரைக்கு வரப்போகும் `நாச்சியார்' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

 

'தாரை தப்பட்டை' படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கும் திரைப்படம், 'நாச்சியார்'. இந்தப் படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். `மகளிர் மட்டும்' படத்துக்குப் பிறகு ஜோதிகா நடக்கும் திரைப்படம் இது. இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல் பதிவின் போதுதான், இயக்குநர் பாலாவின் பிறந்தநாள் வந்தது. அப்போது, தனது இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாலாவுக்கு இசையால் வாழ்த்துச் சொன்னார், இளையராஜா. அந்த வீடியோ அப்போது வைரலானது. 'நாச்சியார்' படத்துக்கு, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவுசெய்கிறார். படத்தின் டீசரை நடிகரும் ஜோதிகாவின் கணவரான சூர்யா சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியிட்டார். இந்நிலையில், படத்தின் ட்ரெயலரை வெளியிட்டுள்ளது படக்குழு.