வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (19/01/2018)

கடைசி தொடர்பு:18:43 (19/01/2018)

’அந்தச் சம்பவத்துக்குப் பிறகு தமிழில் எனக்கு வாய்ப்பே கிடக்கல!’ நடிகையின் வேதனை

தமிழ்த் தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக, கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்புப் புகார் தெரிவித்துள்ளார். 

Photo: Facebook/sruthiharihariharanofficial

இந்தியா டுடே குழுமம் சார்பில் நடத்தப்பட்ட 'தி சௌத் இந்தியன் கான்க்ளேவ்' நிகழ்ச்சி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்தது. அதில், ‘செக்ஸிசம் இன் சினிமா’ என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில், படத்தொகுப்பாளர் பீனா பால், நடிகைகள் பிரணித சுபாஷ் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது பேசிய ஸ்ருதி ஹரிஹரன், ”18 வயதில்  நான் முதல் கன்னடப் படத்தில் நடித்தபோது, பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன். அந்த நிகழ்வு, என்னுள் பெரிய வடுவாய் மாறிப்போனது. அங்கு நடந்ததுகுறித்து எனது டான்ஸ் மாஸ்டரிம் கூறியபோது, ‘இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள்வது எப்படி என்பது தெரியாவிட்டால், சினிமாத்துறையை விட்டே வெளியேறிவிடு’ என்றார்.

அந்தச் சம்பவம் நடந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு, வேறு ஒரு சம்பவம் நடந்தது. எனது கன்னடப் படம் ஒன்றின் ரீமேக் உரிமையைத் தமிழ்த் தயாரிப்பாளர் ஒருவர் வாங்கியிருந்தார். கன்னடத்தில் நான் நடித்திருந்த அதே கதாபாத்திரத்தில் தமிழிலும் எனக்குத் தருவதாக அவர் என்னிடம் கூறினார். ஆனால், அந்த வாய்ப்புக்குப் பதிலாக தன்னுடனும், நண்பர்கள் 4 பேருடனும் ஒத்துழைக்குமாறு என்னிடம் தெரிவித்தார். தயாரிப்பாளரின் அந்தப் பேச்சுக்கு, உரிய பதிலடியை நான் கொடுத்தேன். அதன்பின்னர், படப்பிடிப்புகளுக்கு உரிய முறையில் நான் வருவதில்லை உள்ளிட்ட வதந்திகள் வெளியாகத் தொடங்கின. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தமிழிலிருந்து எனக்கு நல்ல வாய்ப்புகள் எதுவும் வரவில்லை’ என்று கூறி அதிரவைத்தார்.