வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (20/01/2018)

கடைசி தொடர்பு:17:11 (20/01/2018)

கமல்ஹாசன் தயாரிப்பில் முதன் முறையாக நடிக்கும் விக்ரம்!

விக்ரம்

நடிகர் கமல்ஹாசனின் படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்தில், விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தூங்காவனம் பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தத் தகவல், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜேஷ் எம்.செல்வா, இதற்கு முன்பு, 2008-ம் ஆண்டில் 'காலைப்பனி' என்னும் படத்தை இயக்கியிருந்தார். கமல்ஹாசன் தற்போது 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகத்தை திரைக்குக் கொண்டுவரும் முனைப்பில் இருக்கிறார். விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது. கமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தின் பெயர், கதாநாயகி விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன் மகள் அக்ஷரா இந்தப் படத்தில் நடிப்பதாக கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.