அஜீத் படத்தில் ஜெயமோகன்!

அஜீத் - விஷ்ணுவர்தன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நவம்பர் 28ம்  தேதி துவங்குகிறது.

மும்பையில் அஜீத் காலில் ஏற்பட்ட காயத்தால் படப்பிடிப்புக்கு  தடை ஏற்பட்டது.  இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் அஜீத் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு  துவங்குகிறது.

'சிறுத்தை' சிவா இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அஜீத்.  இவருடன் அனுஷ்கா, சந்தானம் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

டிசம்பர் 10ம் தேதி முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது. முதற்கட்ட  படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெறுகிறது.

இப்படத்திற்கு வசனங்களை எழுத்தாளர் ஜெயமோகன் எழுத இருப்பதாக செய்திகள்  வெளியாகி இருக்கிறது. 'நான் கடவுள்', 'அங்காடி தெரு' உள்ளிட்ட படங்களில்  தனது வசனத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஜெயமோகன். தற்போது மணிரத்னம் இயக்கி  வரும் 'கடல்' படத்திற்கு இவர் தான் வசனம் எழுதி இருக்கிறார்.

அஜீத் அனுஷ்கா இணையும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தென்  தமிழகத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!