வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (25/01/2018)

கடைசி தொடர்பு:18:20 (25/01/2018)

பிரியங்கா சோப்ராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்..!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அவர் பரிசாகப் பெற்ற விலையுயர்ந்த வாட்ச் மற்றும் காருக்கு வருமான வரி கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார் என்ற புகாரின் அடிப்படையில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வீட்டில் 2011-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின்போது, அவரது வீட்டிலிருந்த 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள எல்.வி.எம்.எச் டேக் வாட்ச் மற்றும் 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள டொயேட்டா பைரஸ் கார் ஆகியவற்றுக்கு வரி கட்டாமல் இருந்தது தெரியவந்தது. காரும் வாட்சும் சம்பளமாகப் பெறவில்லை; பரிசாகப் பெறப்பட்டது என்று அதிகாரிகளிடம் பிரியங்கா சோப்ரா பதிலளித்திருந்தார். பரிசுப் பொருள்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று பிரியங்கா சோப்ராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.