`தமிழர், தமிழால் இணைந்தால் நாளை நமதே..!' - கமல் சூளுரை

அரசியல் பயணம் குறித்த வீடியோ ஒன்றை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரவுள்ளதாகக் கடந்த ஆண்டு அறிவித்தார். அதையடுத்து, பிப்ரவரி 21-ம் தேதி தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரத்திலிருந்து தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்தார். அவருடைய அரசியல் பயணத்துக்கு `நாளை நமதே' என்று பெயரிட்டுள்ளார். தற்போது, 'நாளை நமதே' என்ற அரசியல் பயணம் குறித்த வீடியோ ஒன்றே கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

அதில், 

  'நேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால் நாளை நமதே. 
   பார்த்ததைப் பயின்றதைப் பழகி நடந்தால் நாளை நமதே
  நிலமும் நீரும் பொதுவெனப் புரிந்தால் நாளை நமதே
  எனக்கே எனக்கு என்று முந்தாதிருந்தால் நாளை நமதே
  மூத்தோர் கடனை இளையோர் செய்தால் நாளை நமதே
  அனைவரும் கூடி தேரை இழுத்தால் நாளை நமதே
   சலியா மனதுடன் உழைத்து வாழ்ந்தால் நாளை நமதே
   முனைபவர் கூட்டம் பெருகிவிட்டால் நாளை என்பது நமதே, நமதே
   கிராமியமே நமது தேசியம் என்றால் நாளை நமதே, நிச்சயம் நமதே
   தமிழர், தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே, நிச்சயம் நமதே...'
என்று பேசியுள்ளார்.

 

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!