`என் ஃப்ரெண்ட் ரெண்டு வருஷமா கர்ப்பமா இருக்கா..!' கலகலப்பூட்டி அறிவுரை வழங்கிய ஈரோடு மகேஷ் | Erode Mahesh advised to students

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (27/01/2018)

கடைசி தொடர்பு:18:17 (02/07/2018)

`என் ஃப்ரெண்ட் ரெண்டு வருஷமா கர்ப்பமா இருக்கா..!' கலகலப்பூட்டி அறிவுரை வழங்கிய ஈரோடு மகேஷ்

டி.வி சீரியலில் ஒரு பெண் கேரக்டர் இரண்டு வருஷமா கர்ப்பமா இருக்கா. அந்தக் கேரக்டர்ல நடிக்குற பெண் என் ஃப்ரெண்ட்தான். எப்பம்மா டெலிவரின்னு கேட்டேன். அதுக்கு, அந்தப் பெண் 'டைரக்டர் சொல்றப்பதான்'ன்னாங்க. நான் அதுக்கு, 'டெலிவரி டேட்ட டாக்டருக்ல்ல சொல்லணும்'ன்னு சொன்னேன். உங்கள் பிள்ளைகள் நல்லா படிக்கணும்ன்னா, தயவுசெய்து நீங்க டி.வி சீரியல் பார்க்காதீங்க" என்று கரூரில் ஈரோடு மகேஷ் பேசினார்.

 

 கரூரில் உள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியில் குடியரசு தினத்தை ஒட்டி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அதற்கு,சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட ஈரோடு மகேஷ், குழந்தைகள் செல்போன், செல்பி மோகத்தால் சீரழிவதாக பேசினார். அந்த விழாவில் பேசிய அவர்,
 "இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு காசோட அருமையைச் சொல்லி வளர்ப்பதில்லை. அதோடு, சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு ஆன்ட்ராய்ட் செல்போனை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். அதனால், அவன் அறிவு வளரும்ன்னு மனப்பால் குடிக்கிறாங்க. ஆனால்,  இளைய சமுதாயம் சீரழியவே செய்கிறது.

உங்கள் பிள்ளைகளின் கைகளில் செல்போன்களைக் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது.  படிக்கிற பிள்ளைங்க இருக்கிற வீடுகள்ல தயவுசெய்து பெண்கள் சீரியல் பார்க்காதீங்க. சரவணன்-மீனாட்சி எக்கேடு கெட்டு போனா என்ன?, வாணி-ராணி என்ன ஆனா என்ன? அவங்க லட்சம் லட்சமா சம்பளம் வாங்கிகிட்டு,அழுவுறாங்க. நீங்க இன்ஸ்டால்மென்டுல டி.வியை வாங்கி வச்சுகிட்டு அதுல சீரியலை பார்த்துட்டு அழுவுறீங்க. ஒரு சீரியல்ல ஒரு பெண் இரண்டு வருஷமா கர்ப்பமா இருக்கா. அந்தக் கேரக்டர்ல நடிக்கும் பெண் என் பிரண்டுதான். 'எப்பம்மா டெலிவரின்னா, டைரக்டர் சொல்லனும்ங்குது அந்த பெண்.

'டாக்டர்ல டெலிவரி டேட்ட சொல்லனும்'ன்னு நான் கேட்டேன். உங்க பசங்க நல்லா வரனும்ன்னா, நீங்க டி.வி, செல்போன்களை அவர்கள் முன்பு பயன்படுத்துவதைத் தவிருங்கள். உங்கள் பிள்ளைகள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், வக்கீல், டாக்டர், எஞ்சினியரா வர்றது முக்கியம் இல்லை. நல்ல மனிதர்களா வர்றதுதான் முக்கியம். அது ஆசிரியர்கள் கைகளில் பாதியும், பெற்றோர்கள் கைகளில் மீதியும் இருக்கிறது' என்று தெரிவித்தார்.