சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி தலைமையில் 2.0 டீசர் வெளியீடு? ஷங்கர் போடும் ஸ்கெட்ச்!

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவரப்போகும் அடுத்த படம் 2.0. சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாகத் தயாரிப்பில் இருக்கிறது. இதுவரை படத்தின் ஸ்டில்கள், இரண்டு பாடல்கள், சில மேக்கிங் வீடியோக்கள் மட்டுமே வெளியான நிலையில், படத்தின் டீசர் எப்போதும் வெளியாகும் என்று ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, அனைத்து இந்திய சினிமா ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். குடியரசு தினத்தன்று தனது டிவிட்டர் பக்கத்தில், டீசருக்கான பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும், அதிகப்படியான CG வேலைகள் இருப்பதால் தாமதம் ஏற்படுவதாக விளக்கம் அளித்துள்ளார்.

ஷங்கர் 2.0

இந்நிலையில், தற்போது இந்த டீசர் வெளியீட்டு விழா ஹைதராபாத் நகரில் பிப்ரவரி மூன்றாவது வாரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலாக இந்த விழாவுக்குத் தென் திரையுலகின் முப்பெரும் ஆளுமைகளான சிரஞ்சீவி, மம்மூட்டி மற்றும் மோகன்லால் வருகை தரவிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே ரஜினி, அக்ஷய் குமார் என்று தமிழ் மற்றும் இந்தி ஹீரோக்கள் இருக்க, மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகைக் கவர இவர்களை அழைக்கவிருப்பதாகத் தெரிகிறது. 400 கோடி செலவில் தயாராகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து வெகு நாள்களாகியும், VFX பணிகளுக்காக கால தாமதம் ஆகிக்கொண்டிருக்கிறது. கடைசியாக ஏப்ரல் 14 என்று அறிவிக்கப்பட்ட படத்தின் ரிலீஸ் தேதி, தற்போது மீண்டும் தள்ளிப் போய் ஏப்ரல் 27-ம் தேதி ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!