Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
##~##

•  42 வயதிலும் ஹாட் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்து இருக்கும் சல்மா ஹைக், இதுவரை மழைக்குக்கூட ஜிம் பக்கமே போனது இல்லையாம். அதேபோல், இதுவரை உடலின் எந்தப் பகுதியிலும் ஆபரேஷன் செய்துகொள்ளாத  நடிகையும் நான்தான் என்கிறார் சல்மா. செம ஜில்மா!  

•  பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கும் ஆதார் ஆணையத்துக்கும், நிதித் துறை, உள்துறை அமைச்சகங்களுக்கும் இடையே டிஷ்யூம் டிஷ்யூம்! ஆதார் தலைவர் நந்தன் நிலகேனி

இன்பாக்ஸ்

3,500 கோடி பட்ஜெட் ஒதுக்கச் சொல்லிக் கேட்க, கிடைத்ததோ

இன்பாக்ஸ்

1,400 கோடிதான். மேலும், ஏற்கெனவே வழங்கப்பட்டு இருக்கும் அடையாள அட்டைகளும் சரிவர வழங்கப்பட வில்லை என்று புகார்களும் குவிகின்றன. நொந்து வெந்து 'எதையும்’ எதிர்பார்த்துக் காத்து இருக்கிறார் நந்தன் நிலகேனி. இதுவும் கடந்து போகும் சாரே!  

• ராம்கோபால் வர்மாவின் படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார் அமிதாப் பச்சன். வர்மா - அமிதாப் கூட்டணியில் ஆறாவது படமாகத் தயாராகிறது 'டிபார்ட்மென்ட்’. நிழல் உலக தாதாக்களை வேட்டையாடும் போலீஸ் அதிகாரிகளைப் பற்றிய படம். இதுல எத்தனை என்கவுன்ட்டர் ராம்?  

இன்பாக்ஸ்

•  'பிரிவோம்... சந்திப்போம்’ என்று மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் தீபிகா படுகோன் - ரன்பீர் கபூர் ஜோடி. காதல் காய்ச்சலில் இருந்து விலகி, இரண்டு வருடங் களாகச் சந்திக்காமலேயே இருந்தார்கள் இருவரும். தீபிகாவின் இப்போதைய பாய் ஃப்ரெண்ட் சித்தார்த் மல்லைய்யா என்ன செய்வார் என்று எகிறுது எதிர்பார்ப்பு. அட, ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்!

•  இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பயன்படுத்துவதற்காக

இன்பாக்ஸ்

6 கோடியில் செம பாலீஷ் பென்ஸ் கார் வாங்கி இருக்கிறார்கள். நீளமான இந்த காரில் ஆங்காங்கே அதி நவீன ஆயுதங்களைப் பொருத்தி இருக்கிறார்கள். காற்றில் விஷ வாயு பரவினால், அது காருக்குள் நுழையாமல் தடுக்கும் வசதி உட்பட மொத்தம் 550 நவீன வசதிகள் உள்ளன அந்த காரில். சீக்கிரமே இந்தியா வல்லரசு ஆகிடும் பாஸ்!  

இன்பாக்ஸ்

•  'நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் நடிக்கவில்லை என்றாலும், ஸ்பாட்டுக்குத் தினமும் சமீரா ரெட்டி வந்துவிடுகிறாராம். நாள் முழுக்க கௌதம் மேனனுடன் உட்கார்ந்து படப் பிடிப்பைப் பார்த்து ரசிப்பவர், 'படத்துக்கு நானும் ஒரு உதவி இயக்குநர்தான்!’ என்கிறாராம். ஓஹோ... ஓஹோஹோ!

•  மன்மோகன் சிங்குக்கு அடுத்து 'நம்பர் 2’ இடத்தைப் பிடிக்க ப.சிதம் பரத்துக்கு எதிராக பிரணாப் காய் நகர்த்தியதில் சோனியா ரொம்பவே அப்செட். அதனால், இப்போது சோனியாவைத் தாஜா செய்ய, 'காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் மட்டும் அல்ல... அடுத்த பிரதமர் வேட்பாளரும் ராகுல் தான். அவர் பின்னால் அணிவகுப் போம்’ என்று ராகுல் புகழ் பாட ஆரம் பித்து இருக்கிறார் பிரணாப். ஒரே கல்லுல... ரெண்டு மாங்கா!

இன்பாக்ஸ்

•  ஹாலிவுட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் இப்போதும் முதல் இடம்... ஓப்ரா வின்ஃப்ரேவுக்குத்தான்! கடந்த ஆண்டு மட்டும்

இன்பாக்ஸ்

1,400 கோடி  சம்பாதித்து இருக்கிறார் ஓப்ரா.

இன்பாக்ஸ்

442 கோடி சம்பாதித்து இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார் பாப் பாடகி லேடி காகா. நல்லா இருங்க!  

இன்பாக்ஸ்

•  'என் அப்பாவும் அம்மாவும் 53 வருடங்களாக மனமொத்த தம்பதியாக வாழ்ந்து வருகிறார்கள். நாட்டின் முக்கியமான மனிதர்களாக இருந்தாலும், நான் பார்த்ததிலேயே மிகவும் சிம்பிள் மனிதர்கள்!’ என்கிறார் தமன் சிங். தனது பெற்றோரின் 50 வருடத் திருமண வாழ்க்கையைப் புத்தகமாகவும் எழுதி வருகிறார். இவரது பெற்றோர்..? பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் திருமதி குர்சரண் சிங். சிங், வீட்டுக்கு நல்லவர்தான்போல!  

•  யுவராஜ் சிங்கை 'சரியான கடலை பார்ட்டி’ என கமென்ட் அடித்திருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. ஐ.பி.எல். போட்டிகளின்போது கட்டிப்பிடி வைத்தியம்செய்து பரபரப்பு கிளப்பியவர்கள், சமீபத்தில் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அப்போது, ''உண்மையைச் சொல்லுங்கள்... நீங்கள் ஒரு கடலை ப்ளஸ் ஜொள்ளு பார்ட்டி தானே?'' என்று யுவராஜை வாரி இருக்கிறார் ப்ரீத்தி. உடனே, ''நீங்கள் மட்டும் என்ன... யார் கூடவோ சுத்திட்டு, கடைசியில் என்னை மாட்டி விட்டுட்டீங்க'' என யுவராஜ் பதிலுக்குக் கவுன்டர் கொடுக்க, அதிர்ந்துவிட்டார் ப்ரீத்தி. நாட்ல கடலை யாவாரம்தான் செழிப்பா நடக்குதுபோல!

•  தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகிலேயே ஊழியர்கள் பணிபுரிய சிறந்த நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறது கூகுள்! பணியாற்று வதற்கு ஏற்ற சூழல், திறமைக்கு மதிப்பு, உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம், ஊதியம் என எல்லா வகையிலும் கூகுள் திருப்தி அளிப்பதாக அந்த நிறுவனத்தின் 1.6 லட்சம் ஊழியர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். மார்க் கெட்டிங் நிறுவனமான கே.பி.எம்.ஜி., ஐ.பி.எம்., பி.எம்.டபிள்யூ. கார் தயாரிப்பு நிறுவனம், இன்டல், சோனி, ஆப்பிள், ஜி.இ., சீமென்ஸ், பிராக்டர் அண்ட் கேம்பிள் ஆகிய நிறுவனங்கள் அடுத் தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இது கூகுள் யுகம்!  

இன்பாக்ஸ்

• போயஸ் கார்டன் வீதிகளில் அடிக்கடி டி-ஷர்ட், டிராக் சூட் சகிதம் வாக்கிங் செல்கிறார் ரஜினி. தன்னந்தனியாக நடை போடும் ரஜினியுடன் ஏரியா செக்யூரிட்டிகள், ஆசைப்பட்டு போட்டோ எடுத்துக்கொள்ளும் வைபவமும் நடை பெறுகிறது. அடடா, இனி போயஸ் கார்டனில் டிராஃபிக் அதிகமாயிடுமே!

இன்பாக்ஸ்

•  'இந்தியாவின் பேரழகி பிரியங்கா காந்திதான். அதிகம் அலட்டிக்கொள்ளாத அழகி அவர்!’ என்று நடிகர் ஜான் ஆப்ரஹாம் கமென்ட் அடித்திருப்பது இந்த வார இந்திய சர்ச்சை. ஓர் அரசியல் தலைவரின் மகளை அதுவும் இரண்டு குழந்தைகளின் அம்மாவை எப்படி 'அழகி’ என்று வர்ணிக்கலாம் எனக் கொடி பிடிக்கிறார்கள் கதர்வாலாக்கள். தங்கபாலு... ஸ்டார்ட் மியூஸிக்!