ராஜுமுருகனின் அடுத்த படம் 'ஜிப்ஸி'- ஜீவா கதாநாயகன்

RAJU

இயக்குநர் ராஜுமுருகன், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இவர் இயக்கிய 'குக்கூ', 'ஜோக்கர்' ஆகிய இரு படங்களும் பரவலாகக் கவனத்தைப் பெற்றன. அதில், சமூகப் பிரச்னைகளை மிகத் தீவிரமாகப் பேசிய 'ஜோக்கர்' திரைப்படம், தேசிய விருது வென்றது. கழிவறை கட்டுவதில் நிகழும் ஊழல்குறித்து அந்தப் படத்தில் அரசியலும் நையாண்டியும் உணர்ச்சி கலந்து சொல்லப்பட்டிருக்கும்.

தற்போது, ராஜுமுருகன் தன் அடுத்தப் படத்தைத் துவங்கியுள்ளார். படத்தின் பெயர் 'ஜிப்ஸி' என்று பெயரிடப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது. கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார். ஒலிம்பியா மூவீஸ் எஸ்.அம்பேத்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ராஜுமுருகன், ஆனந்த விகடனில் 'ஜிப்ஸி' என்ற தொடரை முன்பு எழுதியிருந்தார். அதையே தன் படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!