வெளியிடப்பட்ட நேரம்: 09:47 (12/02/2018)

கடைசி தொடர்பு:10:50 (12/02/2018)

இணையத்தில் வெளியான `காலா’ படத்தின் சண்டைக் காட்சி - அதிர்ச்சியில் படக்குழு!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ’காலா’ மற்றும் ’2.0’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இதில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் படம், 'காலா'. இருவரது கூட்டணியில் வெளிவந்த 'கபாலி', ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து, ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் 2-வது பட அறிவிப்பு வெளியானது.

காலா

முதலில், ஷங்கர் இயக்கத்தில் தயாராகிவரும் '2.0' படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தில் கிராஃபிக்ஸ் பணிகள் முடியாததால், 'காலா' படம் முதலில் வெளியாகும் என படக் குழு அறிவித்தது. இரு தினங்களுக்கு முன்னர் படத்தைத் தயாரிக்கும் நடிகர் தனுஷ், இந்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார். 'காலா' படம், வரும் ஏப்ரல் 27-ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதனால், இப்போதிலிருந்தே ரசிகர்கள் படத்தைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். 

இந்நிலையில், 'காலா' படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் திருட்டுத் தனமாக வெளியாகி, வேகமாகப் பரவிவருகிறது. அதில் ரஜினி, வில்லன் ஒருவரைத் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதனால், படக் குழு அதிர்ச்சியடைந்துள்ளது. 25 விநாடிகள் ஓடும் இந்தக் காட்சி எப்படி வெளியானது எனப் படக் குழு விசாரணைசெய்துவருகிறது.