வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (13/02/2018)

கடைசி தொடர்பு:20:20 (13/02/2018)

காதலர் தின ஸ்பெஷல்! - ஜுங்கா படத்தின் ``கூட்டிப்போ கூடவே பாடல்’’ வெளியீடு

காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் சேதுபதி நடித்துள்ள ஜுங்கா படத்திலிருந்து ’கூட்டிப்போ கூடவே’  பாடலின் லிரிக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

கூட்டிப்போ கூடவே லிரிக் வீடியோ

 

விஜய் சேதுபதி, சாயிஷா சேகல் , மடோனா செபாஸ்டியன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஜுங்கா'. இதற்குத்தானே ஆசைப்பாட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இப்படத்தை இயக்கியுள்ளார். 6 ஆண்டுகளுக்குப் பின்னர், விஜய் சேதுபதி - கோகுல் கூட்டணி இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. படத்தின் டீசர் எற்கெனவே வெளியாகி பெரிய ஹிட்டடித்தது.

இந்தநிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் சிங்கிள் ட்ராக் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சித்தார்த் விபின் இசையில் 'கூட்டிப்போ கூடவே' என்ற இந்தப் பாடலை லலிதானந்த் எழுதியுள்ளார். சத்யபிரகாஷ் மற்றும் ரனினா ரெட்டி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஜுங்கா படத்தின் பெரும்பாலான பகுதி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் மீதமுள்ள பகுதிகள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது . ஒரு கேங்க்ஸ்டர் காமெடி படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை விஜய் சேதுபதி தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.