விண்ணைத் தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்துக்குத் தயாராகும் கௌதம் மேனன்..! | Gautham Vasudev menon will direct VTV-2

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (20/02/2018)

கடைசி தொடர்பு:22:00 (20/02/2018)

விண்ணைத் தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்துக்குத் தயாராகும் கௌதம் மேனன்..!

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் மாதவன் நடிக்கவுள்ளதாகவும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். 

கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு கூட்டணியில் வெளிவந்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2-ம் பாகத்தை எடுப்பது குறித்து இயக்குநர் கௌதம் மேனன் ஆலோசித்து வருகிறார். இதுகுறித்து பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், 'விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கவுள்ளேன். அதில், சிம்பு நடித்திருந்த கார்த்திக் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கவுள்ளார். கதைப்படி, முதல் பாகத்திலிருந்து 8 ஆண்டுகள் கழிந்துவிட்டன.

கார்த்தி (மாதவன்) 4 படங்கள் இயக்கிய ஒரு இயக்குநர். அந்த நேரத்தில் கார்த்தி (மாதவன்) அவருடைய 4 நண்பர்களுடன் மற்றொரு நண்பரின் திருமணத்திற்குச் செல்கிறார்கள். திருமணத்துக்குச் செல்லும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையைப் பற்றிய கதையாக இந்தப் படம் இருக்கும். இதில் மாதவன், புனித் ராஜ்குமார், டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அதில் நடிக்கவுள்ள தெலுங்கு நடிகர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்' என்று தெரிவித்தார்.