வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (21/02/2018)

கடைசி தொடர்பு:18:40 (21/02/2018)

நடிகர் ராம்கி வீட்டில் சென்னை மாநகராட்சி நோட்டீஸ்..!

சொத்து வரி செலுத்தவில்லை என்று நடிகர் ராம்கி வீட்டில் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியுள்ளது. 

சொத்துவரி செலுத்துவது தொடர்பாக, சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 'சென்னை மாநகராட்சியில் உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி செலுத்தாமல் இருப்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 2017-ம் ஆண்டு மட்டும் 577 கோடி ரூபாய் சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டில் 150 கோடி ரூபாய் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நடிகர் ராம்கி, 13 ஆண்டுகளாக 1.17 லட்ச ரூபாய் சொத்து வரி கட்டவில்லை என்று அவரது வீட்டில் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியுள்ளது.