Published:Updated:

நந்தி உண்டு... நந்தன் இல்லையா?

கவின் மலர்படம் : கே.கார்த்திகேயன், ஓவியம் : ஹரன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

மிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத். அதன் அமைப்பாளராக இருந்து முன்னணியை உருவாக்கி வளர்த்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு!

 ''சொந்த ஊர் தூத்துக்குடி. என் இரண்டு வயதில் அப்பா காலமானார். அம்மாவின் பராமரிப்பில்தான் வளர்ந்தேன். அம்மா ஹோட்டலில் கூலி வேலை செய்துவந்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் பி.யூ.சி. படித்தேன். மாணவனாக இருந்தபோது, என் அண்ணன் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தில் இருந்தார். அவர் வைத்திருக்கும் மார்க்சிய, இடதுசாரி நூல்களை வாசித்ததால், இயக்க ஈடுபாடு ஏற்பட்டது. மின்சார வாரியத்திலும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் பணியாற்றினேன். 1987-ல் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டேன். அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, 1996-ல்

நந்தி உண்டு... நந்தன் இல்லையா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியன் ஆனேன். தற்போது கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்!''- சுருக்கமாகத் தன் அறிமுகம் முடித்துவிட்டு தமிழகத்தில் தீண்டாமை குறித்து விரிவாகப் பேசத் தொடங்குகிறார்...  

''சாதியப் பிரச்னைகளில் தலையிட வேண்டும் என்ற ஈடுபாடு எப்போது ஏற்பட்டது?''

''1992-ல், திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட நாலு மூலைக் கிணறு கிராமத்தில் தலித் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. காரணம் இல்லாமல் ஊரில் உள்ள இளைஞர்களைக் கைது செய்தது காவல் துறை. பெண்கள் மற்றும் ஒன்றரை வயதுக் குழந்தை மீதுகூடத் தோட்டாக்கள் உமிழப்பட்டன. இந்தச் சம்பவம் எனக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. 1996-ல் கொடியங்குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைக் கடுமையாகத் தாக்கி, வீடுகளைச் சேதப்படுத்தி, விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் திருடிச் சென்றது காவல் துறை. 1995-96-ல் தென் மாவட்டங்களில் தொடர்ச்சியான சாதிக் கலவரங்களில் தலித்துகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். கட்சி சார்பாகத் தொடர்ந்து அந்த மக்களைச் சந்தித்தேன். தலித்துகளின் சமூக, பொருளாதார விடுதலைக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பது ஒரு கணத்தில் எடுத்த முடிவு அல்ல. தொடர்ச்சியாக தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களைக் கண்டதால், எடுத்த முடிவு!''  

''தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பணிகளில் குறிப்பிடத்தக்கவையாக நீங்கள் கருதுவது?''

''2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி உதயமானபோது நான் அமைப்பாளர் ஆனேன். புதுக்கோட்டையில் நடந்த முதல் மாநாட்டில் மாநிலத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டேன். நாங்கள் முதலில் தலையிட்டது உத்தபுரம் பிரச்னையில்தான். எங்கள் போராட்டத்தால் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டு பாதை உண்டாக்கப் பட்டது. உத்தபுரம் தலித் மக்களின் கோரிக்கைகளுக்காக, 2010-ல் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸார் தடியடி நடத்தி, டி.கே.ரங்கராஜன், நான் உள்ளிட்ட பல தோழர்களை அடித்து இழுத்துச் சென்றார்கள். உத்தபுரத்தில் எம்.பி. நிதியில் இருந்து நிழற்குடை கட்டுவதற்கு 3 லட்ச ரூபாயை டி.கே.ரங்கராஜன் ஒதுக்கித் தந்து

நந்தி உண்டு... நந்தன் இல்லையா?

இருக்கிறார். ஆனால், நிழற்குடை கட்டினால் சமூகப் பதற்றம் வரும் என்று காரணம் சொல்லி, அந்த நிதியை அரசு பயன்படுத்தவே இல்லை. திருச்சி எடமலைப்பட்டி புதூர், கோவை பெருமாள் நகர், சேலம் மகாத்மா காந்தி மகான் தெரு, திருப்பூர் போன்ற பல இடங்களில் தீண்டாமைச் சுவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் டவுனில் பொதுச் சாலையில் தலித்துகள் நுழையக் கூடாது என்பதற்காக இரும்புக் கதவு போட்டு சாதியைப் பாதுகாத்தார்கள். அத்தனை இடங்களிலும் எங்கள் போராட்டங்களால் தீண்டாமைச் சுவர்கள் தகர்க்கப்பட்டன.

2008 ஜூலை 12 அன்று அருந்ததியர் உள்-ஒதுக்கீடு கேட்டு பிரமாண்டமான பேரணியை சென்னையில் நடத்தி, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து மனு அளித்தபோது, கொள்கை அளவில் அருந்ததியருக்கு மூன்று சதவிகித உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார். 18 இடங்களில் ஆலயப் பிரவேசப் போராட்டங்கள் நடத்தி, முதன்முதலாக தலித் மக்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்று இருக்கிறோம். 63 நாயன்மார்களில் நந்தன் மட்டுமே தலித் நாயன்மார். சிதம்பரம் கோயிலுக்குள் அவர் நுழைந்த வழி என்பதற்காக, தெற்கு வாசலை அடைத்துவைத்து இருக்கின்றனர். முன்பு அந்தப் பாதை இருந்ததற்கான சான்றுகள் சேக்கிழார் புராணத்தில் இருக்கின்றன. கட்டுமானப் பணிகளுக்காகத்தான் அந்த வாசல் தற்காலிகமாக வைக்கப்பட்டதாகவும் பின்னர் மூடிவிட்டதாகவும் கதை விடுகிறார்கள். தற்காலிக வாசலுக்கு மேல் எதற்குக் கோபுரம் வைத்தார்கள்? அதிகாரபூர்வமற்ற ஒரு வாசலுக்கு முன் எதற்கு நந்தி வைத்தார்கள்? 2010-ல் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று அந்த வாசலைத் திறக்கக் கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனால், அரசு செவிசாய்க்கவில்லை. 'நந்தன் என்று ஒருவர் இருந்தாரா என்பதே சந்தேகத்துக்கு இடம் இன்றி நமக்குத் தெரியாது’ என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறியது வியப்பை ஏற்படுத்தியது!''

''தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்று பெயர் வைத்து இருப்பது ஏன்? சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை மட்டும் ஒழித்துவிட முடியுமா?''

''சாதி ஒழிக்கப்பட வேண்டும். சாதிய ஒடுக்குமுறையின் கோர வடிவம்தான் தீண்டாமை. பெரியாரும் அம்பேத்கரும் தீண்டாமையை ஒழிக்கத் தனிக் கவனம் எடுத்தார்கள். தீண்டாமை ஒழிப்பு என்பது, சாதி ஒழிப்பின் பிரிக்க முடியாத முன்னுரிமைக் கடமை. தீண்டாமை முற்றிலும் ஒழிந்துபோனாலும்கூட, சாதியை ஒழிக்கத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து போராடும்!''  

நந்தி உண்டு... நந்தன் இல்லையா?

''தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்ற தலித் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறதா?''

''தீண்டாமை ஒழிப்பு முன்னணியிலேயே பல தலித் அமைப்புகள் இருக்கின்றன. மாநில அளவில் 18 அமைப்புகளும் மாவட்ட அளவில் 67 அமைப்புகளும் உள்ளன. சில தலித் அமைப்புகள் தங்கள் சுயநலத்துக்காகவும் பதவியைப் பெறுவதற்காகவும் தொடங்கிய திசையைவிட்டு விலகிச் செல்வதுபோலத் தோன்றுகிறது. அரசியல் கட்சிகளாக உருவெடுக்கும்போது இந்த மாதிரியான போக்கு உருவாகிறது. இதனை மாற்றிக்கொண்டால் எந்த அமைப்புடனும் இணைந்து செயல்படுவதில் எந்தத் தயக்கமும் இல்லை!''

''அப்படி என்றால் தலித்துகள் கட்சி அரசியலுக்கு வரவே கூடாது என்கிறீர்களா?''

''நான் அப்படிச் சொல்லவில்லை. தலித் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்லாமல், சந்தர்ப்பவாதக் கட்சிகளாக மாறுவது தலித் விடுதலைக்கு உதவாது. தலித் மக்கள் நிச்சயமாக அரசியல் சக்திகளாக உருவெடுக்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் பங்கு பெற வேண்டும். அதுதான் தலித் மக்களுக்கான உண்மையான அரசியல் விடுதலை. வெறுமனே எம்.எல்.ஏ -வாகவோ, எம்.பி-யாகவோ ஆகிவிட்டால், அரசியல் அதிகாரம் பெற்றுவிட்டதாக நாம் சொல்லி விட முடியாது. எம்.எல்.ஏ., எம்.பி., ஆவதைவிட, உள்ளாட்சி அமைப்புகளில் தலித்துகள் பதவிக்கு வருவதுதான் இன்றைக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவுபோன்ற எத்தனையோ உதாரணங்களை நாம் பார்த்து விட்டோம்!''

''சாதி ஒழிப்பு குறித்த புரிதல்களோடு இயங்கும் பிற இயக்கங்களுடன் இணைந்து உங்கள் அமைப்பு செயல்படுகிறதா?''

''பெரியாரின் கொள்கைகளைத் திராவிடக் கட்சிகள் கைவிட்டுவிட்ட நிலையில், பெரியார் பெயரைக் காப்பாற்றும்படி சாதியம் குறித்துப் பேசும் இயக்கமாக பெரியார் தி.க. இருக்கிறது. அதனுடன் இணைந்து நாங்கள் பல இயக் கங்கள், கருத்தரங்குகள், கூட்டு நிகழ்வுகளை நடத்தி இருக்கிறோம்!''

''பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அங்கு சென்றுவந்தீர்களே... என்ன நிலைமை?''

''அங்கே காவல் துறை அடாவடித்தனமான அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறது. இம்மானுவேல் குருபூஜைக்குச் செல்லும் தலித் மக்களை இயல்பாக அனுமதித்து இருக்க வேண்டும். செப்டம்பர் 9-ம் தேதி பழனிக்குமார் என்கிற 9-ம் வகுப்பு படிக்கும் தலித் மாணவன் கொலை செய்யப்பட்டான்.

நந்தி உண்டு... நந்தன் இல்லையா?

இம்மானுவேல் குருபூஜை குறித்த அச்சத்தை ஏற்படுத்துவது தான் இதன் நோக்கமாக இருந்திருக்க முடியும். இந்தப் பின்னணியில் ஜான்பாண்டியனைக் கைதுசெய்ததன் மூலம் நிலைமையை மோச மாக்கியது காவல் துறைதான். தங்களது கடும் அதிருப்தியைத் தெரிவிக்க, மறியல் செய்ய முயன்றவர்களைக் கலைக்க எளிய வழிமுறை களைக் கையாளாமல் துப்பாக்கிச்சூடுநடத்தப் பட்டது கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசு நியமித்துள்ள கண்துடைப்பு விசாரணை கமிஷன் மீது தலித் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கோருகிறோம். தவறு இழைத்த அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 லட்சம் ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாஞ்சோலைத் தொழிலாளர் பேரணியின்போதும், உத்தபுரம், காங்கேயனூர் போராட்டங்களின்போதும் தி.மு.க. ஆட்சி. அப்போதும் காவல் துறை இப்படித்தான் நடந்துகொண்டது. ஆட்சி மாறினாலும், காவல் துறையின் அட்டூழியங்கள் மாறவில்லை. காவல் துறையின் ஒரு பகுதி அதிகாரிகளிடம் சாதியக் கண்ணோட்டம் இருப்பதால், ஆட்சியில் யார் இருந்தாலும் சாதிய வன்மத்துடனே நடந்து கொள்கிறது காவல் துறை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு