என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

ஆம்பளைங்களையே வாந்தி எடுக்கவெச்ச அழகி!

ம.கா.செந்தில்குமார்படங்கள் : ஜெ.முருகன்

##~##

'அடிக்கடி பாண்டிச்சேரியில் நடைபெறுகிறது லொள்ளு சபா ஜமா!’ - ஒற்றை வரித் தகவல் பிடித்துப் பயணித்தால், கைலாஷ் பீச் ரிசார்ட்டில்  கலகல கலாய் மீட்டிங்! லொள்ளு சபா சீனியர்களின் ஜாலி கும்மி இது!

 ''எங்க டீமோட முதுகெலும்பு, நல்லி எலும்பு எல்லாம் 'லொள்ளு சபா’ இயக்குநர் ராம்பாலாதான்!'' என்று சந்தானம் கை காட்ட, ''க்கும்... வருஷா வருஷம் எல்லாருக்கும் ஒரு வயசு கூடும். ஆனா, எனக்கு ஒவ்வொரு வருஷமும் நாலு வயசு கூடுது. எல்லாத்துக்கும் காரணம் சார்தான்!'' என்று மனோகரைக் கை காட்டினார் ராம்பாலா.

''அதுதான் மனோகர் மகிமை. அவர் வீட்டுக்கு ஒருத்தன் அடிக்கடி போய், 'நான் சந்தானத்தோட டிரைவர். சாரோட கார் பெட்ரோல் இல்லாம பக்கத்து ரோட்ல நிக்குது. பெட்ரோல் போடப் பணம் வாங்கிட்டு வரச் சொன்னார்’னு மூணு, நாலு டைம் ஐநூறு... ஐநூறு ரூபாயா அபேஸ் பண்ணியிருக்கான். இவரும் ஒரு தடவைகூட எனக்கு போன் பண்ணாம எடுத்துக் கொடுத்துஇருக்காரு. நேத்து என்னைப் பார்த்ததும், 'வெளியே கிளம்பும்போது ஐநூறு, ஆயிரம்னு எடுத்துட்டுப் போப்பா... சும்மா சும்மா உன் டிரைவரை அனுப்பிக் காசு கேட்குறியே?’னு அலுத்துக்கிட்டார். புளி போட்டு விளக்கிச் சொன்ன பின்னாடி, 'அப்போ நான் ஏமாந்துட்டேனோ££?’னு இன்னும் வேகமாக் கை சுத்துறாரு!'' என்று சந்தானம் சொல்ல, விழுந்து புரண்டு சிரிக்கிறார் சுவாமிநாதன்.

ஆம்பளைங்களையே வாந்தி எடுக்கவெச்ச அழகி!

''மச்சி... சுவாமிநாதன் சார்பத்தியும் கொஞ்சம் சொல்லேன்'' என்கிறார் ஜீவா.

''நெய்வேலியில் ஐ.டி.சி. ஹோட்டல் திறப்பு விழா. ஸ்டேஜுக்கு எதிரே கலெக்டர், எஸ்.பி., டி.எஸ்.பி-னு மாஸ் கூட்டம். சிவாஜி மாதிரி பேசுறேன்னு நினைச்சு, சுவாமி 'டாமிட்’னு கத்திட்டார். ஆபீஸர்ஸ் அத்தனை பேரும் செம காண்டு ஆகிட்டாங்க. நான் பாய்ஞ்சு மைக்கைப் புடுங்கி, 'தப்பா எடுத்துக்காதீங்க. சிவாஜி மாதிரி பேசுறாராம்’னு சொல்லிக் காப்பாத்தினேன். இல்லைன்னா, இந்நேரம் சுவாமிநாதன் நெய்வேலி சுரங்கத்துல நிலக்கரி அள்ளிட்டு இருந்திருப்பார்!'' என்கிற சந்தானம் தொடர்கிறார்.

''ஊரையே சிரிக்கவைக்கிற எங்களுக்கு உள்ளுக்குள்ளே பெரிய சோகம் உண்டு சார். கடைசி வரை எங்களுக்கு அழகான ஹீரோயின் அமையலை. 'சின்னத்தம்பி’யை உல்டா பண்ணும்போது, 'குஷ்பு மாதிரி ஒரு பொண்ணு புடிங்க’னு சொன்னேன். ராம்பாலா சாரும் குஷ்பு மாதிரியே ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வந்தார். கடைசியில பார்த்தா, அந்தப் பொண்ணுக்கு மொட்டை நாக்கு. உச்சரிப்பு சுத்தமா வரலை!''- சந்தானம் சோக முகம் காட்ட, ''ஃபீல் பண்ணாதீங்கப்பா... இதுக்கு நான் என்ன பண்ண முடியும்? 'சின்னத்தம்பி’யில் வேற வழி இல்லாம மனோகரையே குஷ்புவா மாத்திட்டோம். வயசுக்கு வந்த மனோகரை அவங்க ரௌடி அண்ணனுங்க பொத்திப் பொத்திப் பாதுகாப்பாங்க. பந்தியில சாப்பிடுற நாலஞ்சு பேர் மனோகரைப் பார்க்க, திருட்டுத் தனமா வருவாங்க. பார்த்துட்டு சகிக்க முடியாம வாந்தி எடுப் பாங்க!'' என்று ராம்பாலா முடிக்க, ''நான் ஆம்பளைங்களையே வாந்தி எடுக்கவெச்சவன்'' என்று கண்கள் மினுங்க மனோகர் கைகளைச் சுற்றத் தொடங்க, ''ஆமா... உலக சாதனை. சீக்கிரமே கல்வெட்டுல பதிச்சிருவாங்க மனோகர்!'' என்று பாலாஜி பல்லைக் கடிக்கிறார்.

ஆம்பளைங்களையே வாந்தி எடுக்கவெச்ச அழகி!
ஆம்பளைங்களையே வாந்தி எடுக்கவெச்ச அழகி!

மனோகரின் டரியல் டார்ச்சர்களைத் தொடர்கிறார் ஜீவா. ''சமீபத்துல சிங்கப்பூர் ஷோவுக்காக ஃப்ளைட்ல கிளம்பினோம். ஏர்போர்ட்ல இறங்கினதுமே சாப்பிடுறதுக்காக ஹோட்டல் போனோம். நாங்க ஆர்டர் பண்ணி முடிச்சதும், 'எனக்கு வயிறு கடாமுடாங்குது. ரெண்டு மசால் வடை. ஒரு டீ போதும்பா’னு மனோகர் சொன்னார். 'யோவ்... இது சிங்கப்பூர்யா. அதெல்லாம் இங்கே கிடைக்காது. பீட்ஸா சாப்பிடுறியா?னு கேட்டேன். உடனே அவர், 'வாங்குறதுதான் வாங்குற... அதையேன் பிச்சு வாங்குற. முழுசாவே வாங்கு’ங்கிறார். 'பிச்சு வாங்கலையா? பீட்ஸாங்கிறது சாப்பிடுற அயிட்டம்யா’னு புரியவைக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துபோச்சு. இதுகூடப் பரவாயில்லை. மனோகர் எந்த அளவுக்கு நல்லவர்னு ஒரு உதாரணம் சொல்றேன். ஒரு முறை ஊட்டியில் ஷூட்டிங். 'டேய்! அங்க பொல்லாக் குளிரு. எல்லாரும் ஜாக்கெட் எடுத்துட்டு வந்துடுங்க’னு சொல்லிட்டேன். ஜோக்குக்காகச் சொல்லலை. நிஜமாவே ஏதோ ஒரு ஆயாவோட பழைய ஜாக்கெட்டை மனோகர் எடுத்துட்டு வந்துட்டார். யூனிட்டே சிரிச்சுத் தெறிச்சுப்போச்சு'' என்று ஜீவா சொல்ல, ''யோவ்... என்னைக் கலாய்க்கிறதுக்காகத்தான் இந்த மீட்டிங்கா?'' என்று மனோகர் டென்ஷன் ஆக, அவர் தலையைத் தடவி கூல் செய்தார் சந்தானம்.  

''எனக்கு பாக்யராஜ், சத்யராஜ் மாதிரி ஒரு காமெடி ஹீரோவா செட்டில் ஆக ஆசை. இது சந்தானத்துக்குத் தெரியும். தெலுங்குல 'வாத்தியார் ராமன்’ங்கிற காமெடி படம் செம ஹிட். 'மஹதீரா’வை அடுத்து  ராஜமவுலி டைரக்ட் பண்ணின படம். அதைத் தமிழ்ல சந்தானத்தை ஹீரோவாவெச்சு ரீ-மேக் பண்ணப் பேசி இருக்காங்க. ஆனா, 'டேய்! அந்தப் படத்தை நீ பண்ணினா நல்லா இருக்கும்’னு என்கிட்ட சொன்ன சந்தானம், அவங்ககிட்டயும் என்னை சிபாரிசு பண்ணி இருக்கார். இதைவிட எங்க நட்புக்கு வேறென்ன உதாரணம் வேணும்?'' என்று ஜீவா சென்டிமென்ட் ப்ளாக் எடுக்க, அவரைத் தொடர்கிறார் ராம்பாலா.

''ஆரம்பத்துல சுவாமிநாதன் சாரை வெச்சுத்தான் 'லொள்ளு சபா’வை ஆரம்பிச்சோம். ஒன்பதாவது எபிசோடில்தான் பாலாஜி வந்து சேர்ந்தார். அவரோட வந்தவர்தான் சந்தானம். அப்ப பாலாஜிக்கு 1,000 ரூபாய் சம்பளம். சந்தானத்துக்கு வெறும் 50 ரூபாய்தான். மனோகருக்கு அதுகூடக் கிடையாது.

ஆம்பளைங்களையே வாந்தி எடுக்கவெச்ச அழகி!

அன்னைக்கு 50 ரூபா வாங்கினவன்தான் இன்னைக்கு தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடியன். சுவாமிநாதன், பாலாஜி, மாறன், ஜீவா, மனோகர்னு எல்லாரும் சினிமாவுல பிஸியா இருக்காங்க. இதைவிட எனக்கு வேறென்ன பெருமை வேணும்?'' என்கிறார்.

''ஆறு மாசத்துக்கு ஒருமுறை எல்லாரும் ஒண்ணு சேர்ந்து ஏற்காடு, ஊட்டி, பாண்டினு கிளம்பிருவோம். அங்கே பழசு, புதுசுனு பேசி, எங்களை நாங்களே அப்டேட் பண்ணிப்போம். ஜப்பான், லண்டன், ஜெர்மனினு எல்லா ஊர்களுக்கும் போய் லொள்ளு சபாவை ஸ்டேஜ் ஷோவா பண்ணிட்டு இருக்கோம். எங்களுக்குள்ள எந்த ஈகோவும் கிடையாது. நாங்க எப்பவும் 'நண்பேன்டா’தான்!'' என்கிற சந்தானத்தின் தோள் உரசி நின்று போஸ் கொடுக்கிறது லொள்ளு டீம்!