வெளியிடப்பட்ட நேரம்: 07:57 (24/02/2018)

கடைசி தொடர்பு:13:01 (24/02/2018)

சிம்புவை மறைமுகமாகப் பாராட்டிய சந்தோஷ் சிவன்

சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அருண்விஜய், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்.’ இந்தப் படத்தில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாள்களுக்கு முன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துவருகிறார். 

சிம்பு

நேற்று மாலை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு - மணிரத்னம் ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ ஒன்றை ட்வீட் செய்து பின், "மணிரத்னம் எப்போதும் புதுமையை விரும்புவர், திறமையான, நேரத்தைக் கடைப்பிடிக்கும் நடிகர்களுடன் வளர்ந்து வருகிறார்" எனவும் டீவீட்டியிருந்தார். படத்தின் சீனியர் டெக்னிஷியன் ஒருவர் இப்படி கூறியவுடன் எஸ்.டி.ஆர் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.