நடிகை ஶ்ரீதேவிக்கு கவுண்டமணி இரங்கல்!

பிரபல நடிகை ஸ்ரீதேவி, துபாயில் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்குத் தனது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோருடன் சென்றிருந்தபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தமிழ், இந்தி நடிகர், நடிகைகள் பலர் ட்விட்டர் தளத்திலும், முகநூல் பக்கத்திலும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், மறைந்த நடிகை ஶ்ரீதேவிக்கு, நடிகர் கவுண்டமணி இரங்கல் தெரிவித்துள்ளார். 

கவுண்டமணி

"ஶ்ரீதேவியுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அதிலும் 'அரும்புகள்' படத்தில் அவர் கதாநாயகியாகவும் நான் வில்லனாகவும் நடித்திருப்போம். அவருடைய மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். மும்பையில் உள்ள அவரது வீட்டில் நாளை காலை 9 மணி முதல் 11.30 மணி வரை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நண்பகல் 12 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!