90-வது ஆஸ்கார் விழா! - சிறந்த துணை நடிகர் சாம் ராக்வெல்! #Oscars90 | Oscars 2018 Live Updates

வெளியிடப்பட்ட நேரம்: 07:49 (05/03/2018)

கடைசி தொடர்பு:09:05 (05/03/2018)

90-வது ஆஸ்கார் விழா! - சிறந்த துணை நடிகர் சாம் ராக்வெல்! #Oscars90

 

Jimmy Kimmel

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரமாண்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 90-வது ஆஸ்கர் விருது விழாவைப் பிரபல டிவி நகைச்சுவை நடிகர் ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்குகிறார். இவர்தான் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவையும் தொகுத்து வழங்கினார். மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கப்பட உள்ளன. 

Sam Rockwell

முதல் விருதாக சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை சாம் ராக்வெல் என்ற நடிகர் ‘த்ரீ பில் போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங், மிசெளரி’ (Three Billboards Outside Ebbing, Missouri’) என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு வழங்கப்படுகிறது.

உலக அளவில் நடந்துவரும் குரூரங்களில் முதன்மையானது பாலியல் கொடுமைகள். அதிலும் கொடுமையானது நாம் அதை அணுகும் விதம், அந்தப் பெண்ணைக் கேள்விகளால் துளைப்பது, அந்த வழக்கில் போலீஸ் காட்டும் மெத்தனம். த்ரீ பில்போர்ட்ஸ் அப்படிப்பட்ட ஒரு கதைக்களத்தைத்தான் அணுகுகிறது. 

மில்ட்ரெட் என்பவரின் மகள் ஏஞ்சலா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார். ஆனால், அந்த வழக்கை மிகவும் மெத்தனமாக போலீஸ் கையாள்கிறது. அதை எதிர்த்து மூன்று விளம்பர தட்டிகளை வைக்கிறார் மில்ட்ரெட். "Raped While Dying", "And Still No Arrests?", and "How Come, Chief Willoughby?" . காவல் துறையில் பணியாற்றும் நபர்களாக சாம் ராக்வெல்லும், வுட்டி ஹேரெல்சனும் நடித்திருந்தார்கள். இருவரும் ஆஸ்கர் விருதுக்கான துணை நடிகர் பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர். ஆரம்பத்தில் வில்லனாக இருக்கும் சாம் ராக்வெல், இறுதியில் மனம் திருந்துகிறார். இந்த ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதைப் பெறுகிறார் சாம் ராக்வெல்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close