ஆஸ்கர் விருது விழாவில் சசி கபூர், ஸ்ரீதேவிக்கு மரியாதை!

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மறைந்த நடிகர்களான சசி கபூர், ஸ்ரீதேவி, ரோஜர் மூர் உள்ளிட்டோருக்கு மரியாதை செய்யப்பட்டது.

 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. சிறந்த இயக்குநர், நடிகர் உள்ளிட்ட 24 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜிம்மி கெம்மல் இரண்டாவது முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வைத் தொகுத்து வழங்குகிறார். விழா தொடங்குவதற்கு முன்பாக கடந்த ஓராண்டில் மறைந்த முன்னணி நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இதில், ஹாலிவுட் நடிகர் ரோஜர் மூர், இயக்குநர்கள் ஜோனாதன் டெம்மி மற்றும் ஜார்ஜ் ஏ.ரோமிரோ, நடிகர் ஹேரி டீன் சாண்டன் உள்ளிட்டோருக்கு மரியாதை செய்யப்பட்டது. பிரிட்டிஷ் உளவாளி ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான ரோஜர் மூர், கடந்தாண்டு மே மாதம், 89 வயதில் உயிரிழந்தார். 

அதேபோல், சமீபத்தில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் கடந்த டிசம்பரில் உயிரிழந்த மூத்த நடிகர் சசி கபூர் ஆகியோருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் மரியாதை செய்யப்பட்டது. துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஸ்ரீதேவி, குளியல் தொட்டியில் மூழ்கி கடந்த 24-ம் தேதி உயிரிழந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!