மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு!

க்யூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை குறைக்கக்கோரி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மார்ச் 1ம் தேதி முதல் புது திரைப்படங்களை வெளியிடுவதில்லை என முடிவு செய்தது. கடந்த இரண்டு வாரங்களாக எந்தப் புது திரைப்படங்களும் தமிழில் வெளியாகாமல் இருந்து வருகிறது. 

திரையரங்கு உரிமையாளர்கள்

இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பேச்சு வார்த்தை கூட்டம் இன்று சென்னை ரோகிணி திரையரங்கில் நடைபெற்றது. இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வத்திடம் பேசுகையில், "தற்போது தமிழகத்தில் மட்டும் உள்ள 8% கேளிக்கை வரி முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். இருக்கைகளைக் குறைக்க அனுமதிக்கவும், லைசென்ஸ் புதுப்பிக்கும் முறையை ஒரு வருடத்திலிருந்து 3 வருடமாக உயர்த்த வழிவகை செய்ய வேண்டும், திரையரங்கு பராமரிப்புக் கட்டணம் (TMC) - A/C திரையரங்குகளுக்கு 5 ரூபாய் எனவும் Non A/C திரையரங்குகளுக்கு 3 ரூபாய் எனவும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட அடிப்படையில் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பாக நாளை அமைச்சரைச் சந்தித்து பேச உள்ளோம்.  ஒரு வார காலத்திற்குள் இந்த அரசாணை பிறப்பிக்காத பட்சத்தில் மார்ச் 16 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை திரையரங்குகளை மூடுவது என முடிவெடுத்துள்ளோம். தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. எங்களது போராட்டம் தமிழக அரசுடன் தானே தவிர தயாரிப்பாளர்களுடன் இல்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!