வெளியிடப்பட்ட நேரம்: 08:44 (10/03/2018)

கடைசி தொடர்பு:08:44 (10/03/2018)

இமயமலை புறப்பட்டார் ரஜினிகாந்த்..!

அரசியல் கட்சி தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

அரசியல் கட்சித் தொடங்கி தேர்தலில் போட்டியிடுவேன் என்று கடந்த டிசம்பர் 31-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். மேலும், இதுதொடர்பாக அவரது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசனைகளையும் செய்துவருகிறார். இந்த நிலையில், திடீரென்று இன்று ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். சென்னையிலிருந்து விமானத்தில் இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்குச் செல்லும் அவர், அங்கிருந்து தர்மசாலா, உத்ரகாண்டிலுள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பயணத்தின்போது, அவருக்கு விருப்பமான வழிகாட்டிகள், குருமார்களை சந்தித்து ரஜினிகாந்த் ஆசிபெறவுள்ளார். இதுகுறித்து தெரரிவித்த அவர், 'இமயமலையில் 10 அல்லது 15 நாள்கள் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். அரசியல் இயக்கம் தொடங்குவதகு குறித்து முடிவெடுத்தப் பிறகு இமயமலை செல்கிறேன். புதிதாக எந்த வேண்டுதலும் இல்லை. தர்மசாலாவிலிருந்து இமயமலை சென்று, அடுத்து பாபா குகைக்கு சென்று வழிபட உள்ளேன்' என்று தெரிவித்தார். காவிரி ஆணையம் குறித்தக் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.