Published:Updated:

திவ்யா எம்.பி.பி.எஸ் !

ந.வினோத்குமார்

திவ்யா எம்.பி.பி.எஸ் !

ந.வினோத்குமார்

Published:Updated:

 படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்

##~##
இவர் பெயர் திவ்யா. மாற்றுத் திறனாளி. பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 800 மதிப்பெண்கள். மருத்துவராக வேண்டும் என்பது கனவு. மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான எல்லாத் தகுதிகள் இருந்தும், இவருக்கு இடம் தர மறுத்தது தேர்வுக் குழு. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தன் உரிமையை வென்றிருக்கிறார். படிப்பதற்குச் சுலபமாக இருந்தாலும், அவர் நடத்திய போராட்டம் வலி மிகுந்தது. தொடர்கிறார் திவ்யா...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் அப்பா ஒடிஷால பெயின்டரா வேலை பார்க்குறார். அம்மா வீட்டு வேலை, கூலி வேலைனு எங்களைப் பாத்துக்கறாங்க. எனக்குப் பிறப்பில் இருந்தே இந்தக் குறைபாடு. 'கைபோஸ்கோலியாசிஸ்’னு மருத்துவத்தில் சொல்வாங்க. சில குரோமோசோம்கள் எனக்கு அப் நார்மலா அமைஞ்சு இருக்கு. இந்தக் குறைபாட்டை 'லோகோமோட்டிவ் டிஸ்எபிலிட்டி’னு (எல்.டி) வகைப்படுத்துறாங்க. அதனால, என் ஒரு கால் சின்னதா இருக்கும். இன்னொரு கால் நீளமா இருக் கும். வியர்வைச் சுரப்பிகள் அழிஞ்சிட்டதால், எனக்கு வியர்க்கவும் செய்யாது. போகாத ஊர், பார்க்காத வைத்தியம் இல்லை. சரிசெய்ய முடியலை.

திவ்யா எம்.பி.பி.எஸ் !

இந்த நிலைமையிலும் ரெண்டு கி.மீ. தூரத்துல இருக்கும் ஸ்கூலுக்கு நடந்து போய்தான் படிச்சேன். பத்தாவது பொதுத் தேர்வில் 433 மார்க். ப்ளஸ் டூ-வுல 800 மார்க். எங்க குடும்ப நண்பர் சாஹீருதீன், 'நீ எம்.பி.பி.எஸ்-க்கு அப்ளை பண்ணும்மா... நிச்சயம் கிடைக்கும்’னார். நம்பிக்கையோட விண்ணப்பிச்சேன். கவுன்சிலிங் போனேன். அங்க இருந்த தேர்வுக் குழு மருத்துவர்கள் 'உனக்கு உடம்புல குறைபாடுனு சொல்ற. ஆனா, நீ நல்லா நடக்குறியே?’னு கேட்டாங்க.

என்னை மாதிரி மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை ஒண்ணு கொடுப்பாங்க. அதை ஒரு

திவ்யா எம்.பி.பி.எஸ் !

அரசு மருத்துவர்தான் கொடுப்பார். அப்படிக் கொடுக்கும்போது, காலில் குறைபாடு இருக்குற எல்லோருக்கும் 'எல்.டி’-னு மட்டும் குறிப்பிடுவாங்க. ஆனா, என்ன விதத்தில் குறைபாடுங்கிற விவரங்கள் அதில் இருக்காது. மாற்றுத் திறனாளிகளுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கணும்னா, 40-ல் இருந்து 70 சதவிகிதம் வரைக்கும் குறைபாடு இருக்கணும். எனக்கு 46 சதவிகிதம் குறை பாடு இருக்கு. ஆனா, அதைத் தேர்வுக் குழு ஏத்துக்கலை.

அப்புறம், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கம்  மூலமா சென்னை ஹைகோர்ட்ல கேஸ் போட்டோம். வழக்கறிஞர் பிரபாகரன் சார் எனக்காக வாதாடினார். குஜராத் மாநிலத்தில் இதே மாதிரி ஒரு வழக்கு வந்ததாகவும், அது இப்ப ஸ்டேயில் இருப் பதால், எனக்கு சீட் கொடுக்க முடியாதுன் னும், ஸ்டே இல்லைன்னா எனக்கு சீட் கிடைக்கும்னும் நீதிபதி சொன்னார். உடனே, பிரபாகரன் சார் உச்ச நீதிமன்றத் துக்குப் போனார். அங்கே கேஸுக்கு ஸ்டே இல்லைனு சொல்லிட்டாங்க. சென்னை உயர் நீதிமன்றமும் எனக்கு சீட் ஒதுக்கணும்னு  தீர்ப்பு கொடுத்துச்சு.

எனக்கு தர்மபுரி மெடிக்கல் காலேஜ்ல சீட் ஒதுக்கினாங்க. அப்படி சீட் ஒதுக்குறப்போ 12 ஆயிரம் ரூபா கட்டணும். அவ்வளவு பணத்தை எங்களால் எப்படிப் புரட்ட முடியும்? எங்க சங்கத்தில் இருந்து சிம்மச்சந்திரன் சார் எனக்காகப் பணத்தைக் கட்டினார்.

கவுன்சிலிங்கில் இடம் கிடைக்கிற வரைக்கும் நான் தனியார் கல்லூரியில படிச்சிட்டு இருந்தேன். தீர்ப்பு விவரத்தோட போய் 'எனக்கு டி.சி. கொடுங்க’னு கேட்டப்போ, அதைக் கொடுக்க அலைக்கழிச்சாங்க. ஒரு வழியா அலைஞ்சு திரிஞ்சு  கையில, காதுல இருந்ததை வித்து ஃபீஸ் கட்டினேன். அட்மிஷன் ஃபீஸ்,

திவ்யா எம்.பி.பி.எஸ் !

புத்தகங்கள், ஹாஸ்டல் ஃபீஸ்னு எல்லாத்தையும் எப்படியோ சமாளிச் சிட்டேன். இன்னும் அஞ்சரை வருஷப் படிப்பு இருக்கு. அதுக்கான செலவுகளை எப்படிச் சமாளிக் கிறதுன்னுதான் தெரியலை.

மார்க், ஒதுக்கீடு, மனிதாபிமானம்னு எல்லாத்தையும் தாண்டி, என்னை மாதிரியானவங்களுக்குன்னு சில உரிமைகள் இருக்கு இல்லையா? அதை இந்த அரசாங்கம் தானே கொடுத்துச்சு? அந்த நம்பிக் கையில்தானே நாங்களும் முன்னேற ணும்னு ஆசைப்படுறோம்?

ஆனா, அதுக்கு நாங்க எவ்வளவு போராட வேண்டியிருக்கு. என்னை யாரும் பரிதாபமாப் பார்க்கிறதை நான் விரும்பலை. அப்படிப் பார்க்கிறவங்களை நான் திரும்பிப் பார்த்தா... விழுந்துடுவேனே... இப்பவும் சொல்றேன்... ஐயம் மென்டலி ஃபிட்!''