இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கினார் ராம்நாத் கோவிந்த்..!

2018-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கினார். 

Ilayaraja

2018-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றுவருகிறது. பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி சிறப்பித்துவருகிறார். இசைஞானி இளையராஜா 2018-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் கையிலிருந்து பெற்றார். இன்றைய தினம் வழங்கப்பட்ட முதல் விருது அவருக்குதான் வழங்கப்பட்டது.

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமி, இசைக்கலைஞர் அரவிந்த் பாரிக், யோகா கலைஞர் நானம்மாள் உள்ளிட்ட அனைவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் விருதுகள் வழங்கப்பட்டன. 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும் 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும் 72 பேருக்கு பத்மஶ்ரீ விருதும் குடியரசுத் தலைவர் கையால் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!