`திருமணமான ஆண்களின் வாழ்க்கையில்... சில நடிகைகள்!' - ஞானவேல் ராஜாவின் மனைவி ட்வீட்

`நடிகைகள் தங்களின் பட வாய்ப்புகளுக்காகத் திருமணமான ஆண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்' எனத் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவின் மனைவி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

கே.இ ஞனவேல் ராஜா மனைவி

தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜாவின் மனைவியும் ஆடை வடிவமைப்பாளருமான நேஹா ஞானவேல், நடிகைகளை விமர்சிக்கும் விதமாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், `நடிகைகள் தங்களின் பட வாய்ப்புகளுக்காகத் திருமணமான ஆண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள், வாய்ப்புக்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். இந்த நடிகைகள் பற்றி நான் விரைவில் அறிவிப்பேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார். பிறகு, இந்தப் பதிவைத் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.

நேகா ஞானவேல்ராஜா
 

ஆனால் நேற்று, தான் பதிவிட்ட கருத்தை ஏன் நீக்கினார் என்பது பற்றி விளக்கமளித்து மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ''நான் வெளியிட்ட பதிவு எனது வாழ்க்கையில் நடப்பது இல்லை. எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. என்னை சுற்றியிருப்பவர்கள் ஒரு சிலரின் நடவடிக்கைகள் என்னை அதிருப்தி அடையச் செய்கிறது. சில நடிகைகள் திருமணமான ஆண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். இது குறித்து ஒரு பெண் தைரியமாகப் பேசினால் உடனே இதை லீக்ஸ் எனப் பெயர்வைத்துவிடுகின்றனர். நான் என்னை பிரபலப்படுத்திக்கொள்ளவோ நாடகமாடவோ இதைக் கூறவில்லை. இந்தப் பதிவால் எனக்கும் என் கணவருக்கும் பிரச்னை என்பது போன்ற கருத்துகள்  எழக்கூடும் என்பதனாலேயே அந்த ட்வீட்டை நீக்கினேன். எனது பதிவு புரிய வேண்டிய பெண்களுக்கு ஒரு எச்சரிகையாக இருக்கும். அப்போது அவர்கள் புரிந்துகொள்வார்கள். சமூக வலைதளங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது'' என்று தெரிவித்துள்ளார். இவரின் கருத்து சினிமா வட்டாரங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!