`வைரலான புகைப்படத்தில் இருப்பது நான்தான்’- மாடல் விளக்கம்!

சமூக வலைதளங்களில், நேற்று ஒரு படம் செம வைரலாகப் பரவியது. அதில் இருக்கும் பெண், இசையமைப்பாளர் அனிருத்துக்கு பெண் வேடம் போட்டதுபோல இருக்க, 'இது அனிருத் தான், பெண் வேடத்தில் இருக்கிறார்' எனப் பலரால் பகிரப்பட்டது. 

அனிருத்


ஏற்கெனவே, அனிருத் திரைபடங்களில் நடிக்க உள்ளார் போன்ற தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், இந்தப் பெண்ணை அனிருத் என்றே பலரும் நம்பினர். இந்த நிலையில், அனிருத் ரசிகர்கள் பலர், 'இது அனிருத் இல்லை' என்று தக்க ஆதாரத்துடன் தற்போது விளக்கம் அளித்துவருகின்றனர். 

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், அனிருத் ரசிகர் ஒருவர் இந்தப் படத்தில் இருக்கும்  மாடலிடம், ''சிவப்பு நிறப் புடவையில் இருப்பது நீங்கள்தானே'' எனக் கேட்க, ''ஆம், நான்தான்'' என அந்த மாடல் உறுதிசெய்கிறார். 

அனிருத் பெண் புகைப்படம்

இதன்மூலம், இந்தப் படத்தில் இருப்பது அனிருத் இல்லை எனவும், அனிருத்துக்கு எதிராக தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!