Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
##~##
இன்பாக்ஸ்

டுமாரோ நெவர் டைஸ்’ என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தின் இயக்குநர் ரோஜர் ஸ்பாட்டிஸ்வுட்டின் அடுத்த ஹீரோ 'பாய்ஸ்’ சித்தார்த். கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க இருக்கும் ரோஜர், அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற முகம் சித்தார்த்திடம் இருப்பதாகச் சிலாகிக்கிறார்.  ஸ்ருதியுடன் மனக் கசப்பு, பத்திரிகையாளரிடம் தகராறு என்று சிக்கலில் சிக்கினாலும் ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது சித்தார்த்தை குஷியாக்கி இருக்கிறது. குஷி பிஸியா இருங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

'ஸ்லம் டாக் மில்லியனர்’ புகழ் ஃப்ரீடா பின்டோ, சர்வதேச அழகுப் பொருட்கள் தயாரிப்பு  நிறுவனத்தின் மாடலாக ஒப்பந்தமாகி இருக் கிறார். மாடலாக அழகியின் சம்பளம் கிட்டத்தட்ட

இன்பாக்ஸ்

35 கோடி. ஐஸ்வர்யா ராயே வாங்காத சம்பளம் இது. ஃப்ரீடாவின் ஆஸ்கர் புகழுக்காக மறுப்பேதும் சொல்லாமல் அள்ளிக் கொடுத்து இருக்கிறார்கள். மச்சத்தால் தொட்ட உச்சம்!

இன்பாக்ஸ்

தன்னை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தொட்ட பூரிப்பில் இருக்கிறார் பிரிட்னி ஸ்பியர்ஸ். ட்விட்டர் கணக்கில் பாரக் ஒபாமா, லேடி காகா, ஜஸ்டின் பைபர், கேட்டி பெர்ரி, கிம் கதர்ஷியனை அடுத்து ஒரு கோடியைத் தொட்ட செலிபிரிட்டி பிரிட்னி ஸ்பியர்ஸ்தான். கோடி லேடி!

இன்பாக்ஸ்

ஹிட் கொடுப்பதைக் காட்டிலும் வரதட்சணை வாங்குவதில் போட்டா போட்டி நடக்கிறது தெலுங்கு ஹீரோக்களிடையே! 100 கோடி வரதட்சணை பெற்றார் அல்லு அர்ஜூன். அப்போலோ மருத்துவமனை ரெட்டியின் பேத்தி உபாசனா கமினேனியைத் திருமணம் செய்யவிருக்கும் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜாவுக்கு வரதட்சணை எவ்வளவு தெரியுமா?

இன்பாக்ஸ்

120 கோடி ப்ளஸ் ஒரு குட்டி விமானம். பாவம்... கஷ்டப்படுறவங்கள்ல! 

தனது வாழ்நாள் கனவான லக்னோ நினைவுப் பூங்காவைத் திறந்து வைத்து இருக்கும் மாயாவதிக்கு, ஆரம்பமே அடி சறுக்கியிருக்கிறது. உ.பி-யில் 400-க்கும் மேலான சிறுவர்களைக் காவு வாங்கிய மூளை அழற்சி நோயைக் கட்டுப்படுத்த

இன்பாக்ஸ்

18 கோடி ஒதுக்கியிருந்தார் மாயாவதி. ஆனால், பூங்காவுக்கு ஒதுக்கிய தொகை 685 கோடி. அதிர்ந்துபோன மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. உப்பு தின்னா தண்ணி குடி... தப்பு பண்ணா தலையில் அடி!

இன்பாக்ஸ்

ஒரே ஹீரோயினைத் தன்னோடும் தன் மகனோடும் இணைத்துப் பேசுவது அவமானமாக இருக்கிறது எனக் கொந்தளித்திருக்கிறார் நாகார்ஜுனா. அனுஷ்காவை இவரோடும் நாக சைதன்யாவோடும் மீடியா கிசுகிசுப்பதே காரணம். 'எல்லாத்துக்கும் ஓர் அளவு உண்டு!’ என்று திட்டாத குறையாக அறிக்கைவிட்டு ஆதங்கப்பட்டு இருக்கிறார். தப்புதானே!

இன்பாக்ஸ்

மனோஜ்குமார், ஜெய் பகவான், தேவேந்திர சிங், விகாஸ் கிருஷ்ணன் என நான்கு இந்தியர்கள் அடுத்த ஆண்டு லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிக்குத் தகுதி பெற்று இருக்கின்றனர். ஆனால், சென்ற ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற விஜேந்தர் சிங் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறவில்லை. 'அதிக மீடியா வெளிச்சமும் சினிமா, விளம்பரம் என விஜேந்தர் பாதை மாறியதுதான் இந்த நிலைமைக்குக் காரணம்!’ என்கிறார்கள். நாக்-அவுட் பண்ணிட்டாங்களே!