Published:Updated:

ஒரு முட்டையில் எத்தனை ஆம்லெட்?

கே.ராஜாதிருவேங்கடம்

ஒரு முட்டையில் எத்தனை ஆம்லெட்?

கே.ராஜாதிருவேங்கடம்

Published:Updated:
##~##
ஒரு முட்டையில் எத்தனை ஆம்லெட்?

''நைட் ஷோ... லேட் ஸ்லீப். ஐ ஸீ யூ மிஸ்டு கால். ஐ கால் யூ. வாட் மேட்டர்?'' - பிய்ந்துபோன பீட்டர் இங்கிலீஷில் ஜெய்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஊருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளேன். மக்களுக்குப் பயன்படும் வகையில் நல்ல பயனுள்ள கேள்விகளாகக் கேளுங்களேன்!'' - தெள்ளிய தமிழில் பா.ம.க-வின் தலைவர் கோ.க.மணி.

''ஆங்... ஜெனரல் நாலெட்ஜ் கொஸ்டீன்ஸ்தானே... எனக்கும் ஒரு நாள் என்கொயரி வரும்னு தெரியும். அதான் எப்பவும் தயாரா இருக்கேன்!'' - தமிங்கிலீஷில் 'விஜய் டி.வி.’ ரம்யா.

''சொல்லித்தான் ஆகணுமா? முயற்சி பண்ணிப் பார்ப்போம். கேளுங்க!'' - எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்.

''ஐ டோன்ட் நோ ஆல் எபவுட் தமில்நாட். லெட்ஸ் கிவ் எ ட்ரை... புரொஸீட்!'' - நச் ஆங்கிலத்தில் லெட்சுமி ராய்.

எந்தத் துறவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'ஏழாம் அறிவு’ படம் உருவாக்கப்பட்டது?

பதில்: போதிதர்மன்.

ஜெய்: ''மனசுக்குள்ள இருக்கு. ஆனா, வரலை. புத்தர்னு நினைக்கிறேன்!'' (படத்தோட இசை வெளியீட்டு விழாவை நீங்கதானே பாஸ் தொகுத்து வழங்குனீங்க?)  

ஒரு முட்டையில் எத்தனை ஆம்லெட்?

கோ.க.மணி: ''திரைப்படம் பத்திலாம் தெரியாதுங்க!''

ரம்யா: ''போதிதர்மன். ஹை... முதல் கேள்விக்கு பதில் கரெக்ட்!''

ச.தமிழ்ச்செல்வன்: ''போதிதர்மன்... சரிதானே?''

லட்சுமி ராய்: '' 'ஏழாம் அறிவு’ பார்க்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன். பட்... யாரு அந்த சுவாமிஜி?''

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு எத்தனை நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டது?

பதில்: 4 நாட்கள்.

ஒரு முட்டையில் எத்தனை ஆம்லெட்?

ஜெய்: ''அஞ்சு நாளு சார்... என் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு எல்லாம் ரொம்ப வருத்தம்!''

கோ.க.மணி: ''பதினஞ்சாம் தேதியில இருந்து இருபத்தி ஒண்ணாம் தேதி வரைக்கும். அப்படின்னா, எத்தனை நாளுன்னு நீங்களே கணக்குப் போட்டுக்கோங்க!''

ரம்யா: ''டாஸ்மாக்லாம் மூடவே இல்லை. சினிமா தியேட்டர்தான் மூடினாங்கனு நினைக்கிறேன்!''

ச.தமிழ்ச்செல்வன்: ''மூன்று நாட்கள்னு நினைக்கிறேன்!''

லட்சுமி ராய்: ''சிக்ஸ் டேய்ஸ்... கரெக்டா? ஆனா, ஸாரி... நெட்ல பார்த்து காப்பி அடிச்சேன்!''

(கடும் அதட்டலுக்குப் பிறகு கணினி தொடர்பைத் துண்டித்துவிட்டுக் கேள்வி களை எதிர்கொண்டார்!)

அரசுப் பேருந்தில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

பதில்: இரண்டு ரூபாய்

ஒரு முட்டையில் எத்தனை ஆம்லெட்?

ஜெய்: ''மூணு ரூபா... பஸ் படத்துல நடிச்சிட்டு டிக்கெட் விலை தெரியாம இருக்குமா?''

கோ.க.மணி: ''இரண்டு ரூவா... ஆனால்,  இடைநில்லாப் பேருந்துல இன்னும் அதிகம். அந்தக் கணக்கும் வேணுமா?''

ரம்யா:  ''சுத்தம்... பஸ்ல போயிருந்தாத் தானே அதெல்லாம் தெரியும். ம்ம்ம்... மூணு ரூபாய்னு போட்டுக்கோங்க!''

ச.தமிழ்ச்செல்வன்: ''இரண்டு ரூபாய்!''

லட்சுமி ராய்: ''மே பி டென் ருப்பீஸ். 10 ரூபாய்க்குக் கம்மியா பஸ்ல போனா நல்லா இருக்காது!''

ஈமு கோழியின் ஒரு முட்டையில் எத்தனை ஆம்லெட் போடலாம்?

பதில்: 10 முதல் 12 வரை

ஜெய்: ''ஒரு முட்டையில ஒரு ஆம்லெட்தான்... சைஸ் குறைச்சுப் போட்டா, ரெண்டு போடலாம். சார், எனக்கு சமைக்கலாம் தெரியாதுங்க!''

கோ.க.மணி: ''ஈமு கோழி முட்டையை நான் பார்த்ததே இல்லையேப்பா!''

ஒரு முட்டையில் எத்தனை ஆம்லெட்?
ஒரு முட்டையில் எத்தனை ஆம்லெட்?

ரம்யா: ''ஒரு வெஜிடேரியன் பொண்ணுகிட்ட கேக்குற கேள்வியா இது? உங்களை போலீஸ்கிட்ட புடிச்சுக் கொடுத்தா என்ன?''

ச.தமிழ்ச்செல்வன்: ''எந்தக் கோழி முட்டையா இருந்தா லும், ஒரு முட்டையில ஒரு ஆம்லெட்தாங்க போட முடியும்!''

லட்சுமி ராய்: ''அது என்ன கோழி? நான் பார்த்ததே இல்லையே? தமிழ் சினிமாவில் ஹீரோயின்களைத்தான் 'கோழி’னு சொல்வாங்க. ஆனா, ஏன்னு தெரியாது. உங்களுக்குத் தெரியுமா?''

அ.தி.மு.க. எத்தனையாவது ஆண்டு தொடக்க விழாவைச் சமீபத்தில் கொண்டாடியது?

பதில்: 40

ஜெய்: ''நான் பொறந்து 26 வருசமாகுது. அதுக்கு முன்னாடியே அந்தக் கட்சி ஆரம்பிச்சி இருப் பாங்க. வருஷமா சார் முக்கியம்?''

கோ.க.மணி: ''இதுகூடத் தெரியாம இருப்பேனா... 40!''

ரம்யா: ''ஏ.டி.எம்.கே. தெரியும். அது ஆண்டு விழா கொண்டாடினது எல்லாம் தெரியாது பாஸ்!''

ச.தமிழ்ச்செல்வன்: ''அவங்க ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆனதுக்குத்தானே விழா எடுத்தாங்க?''

லட்சுமி ராய்: ''கொஞ்சம் இருங்க... (தீவிரமாக யோசிக்கிறார்) 15... அவ்வளவுதாம்ப்பா இருக்கும்!''