’வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்..!’ - தமிழில் அசத்தும் டெட்பூல்-2 ட்ரெய்லர் | Deadpool-2 movie tamil trailer has released

வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (29/03/2018)

கடைசி தொடர்பு:18:51 (29/03/2018)

’வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்..!’ - தமிழில் அசத்தும் டெட்பூல்-2 ட்ரெய்லர்

அமெரிக்காவின் சூப்பர் ஹீரோ ஸ்பூஃப் திரைப்படமான 'டெட்பூல்-2'வின் டிரெய்லர் தமிழில் வெளியாகியுள்ளது. 

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'டெட்பூல் 2' திரைப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது. அந்தப் படத்தை டேவிட் லெயிட்ச் இயக்கியுள்ளார். அந்தப் படத்தில் ஜோஷ் ப்ரோலின், ரெய்ன் ரெய்னால்ஸ், பிரியானா ஹில்டுபிராண்ட் உள்ளிட்டோர் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டைலர் பேட்ஸ் இசையமைத்துள்ளார். டெட்பூல் 2 படத்தின் ஆங்கில டிரெய்லர் மார்ச் 22-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது, தமிழ் டப்பிங் ஜாக்கிச் சான் படங்களைப் போல, நகைச்சுவைத்தன்மையுடன் படத்தின் வசனங்கள் டப்பிங் செய்யப்பட்டு டெட்பூல்-2வின் தமிழ் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரை ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா அதனுடைய அதிகாரபூர்வ யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ் டப்பிங்கில், 'வேங்கை மவன் ஒத்தைல நிக்கேன்ல, ஒரு கெத்தான, மாஸான டீம ரெடி பண்றோம்' என்று தமிழ் ரசிகர்களைக் கவரும் வகையில் டப்பிங் பேசி அசத்தியுள்ளனர்.