வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (29/03/2018)

கடைசி தொடர்பு:01:55 (30/03/2018)

மெர்சல் படத்துக்கு இங்கிலாந்தில் விருது! விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் மெர்சல். நடிகர் விஜய், எஸ்.ஜே சூர்யா, சத்தியராஜ், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படம் தற்போது இங்கிலாந்து தேசிய திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது

மெர்சல்

மெர்சல், கடந்த வருடம் வெளியான படங்களில் அதிக சர்ச்சைகளைச் சந்தித்த படம் எனலாம். ஜி.எஸ்.டி வரி குறித்த வசனம், மருத்துவத் துறையில் நடக்கும் வசூல் போன்ற பல வசனங்கள் படத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்தச் சர்ச்சைகளை கடந்து இந்தப் படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் நடைபேற்ற 4 வது தேசியத் திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருதை மெர்சல் படம் வென்றுள்ளது. இந்த விருதுக்காகன பட்டியலில், பிரான்ஸ், ரஷ்யா, சிலி, தென்னாப்பிரிக்கா, சுவீடன் நாட்டுப் படங்கள் இருந்தன. எனினும் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட மெர்சல் படம் இந்த விருதை வென்றுள்ளது. இந்த விருது முழுக்க முழுக்க ரசிகர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விருதாகும். 
இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.