வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (09/04/2018)

கடைசி தொடர்பு:16:10 (09/04/2018)

இந்தியாவுக்காகப் பதக்கம் வென்ற மகன்; மகிழ்ச்சியில் நடிகர் மாதவன்!

நடிகர் மாதவன் மகன் வேதாந்த் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

நடிகர் மாதவன் மகன் வேதாந்த்

நடிகர் மாதவன், தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். அவரின் மகன் வேதாந்த் நீச்சல் வீரர். தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச நீச்சல் போட்டியில் மாதவன் மகன் கலந்துகொண்டுள்ளார். 1,500 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் கலந்துகொண்ட வேதாந்த், மூன்றாவதாக வந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்காக இவர் வெல்லும் முதல் பதக்கம் ஆகும். 

இதனால் மாதவனும் அவரின் மனைவி சரிதாவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்து சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மாதவன், ‘வேதாந்த் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்றுள்ளான். இது சரிதாவுக்கும் எனக்கும் பெருமையான தருணம். அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார். சினிமா ரசிகர்களும் விளையாட்டு ரசிகர்களும் வேதாந்த்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.