வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (10/04/2018)

கடைசி தொடர்பு:13:53 (10/04/2018)

ஆறு கெட்டப்... ஃபாரின் அழகிகள்... சரவணா அண்ணாச்சியின் அடுத்த அதிரடி!

சரவணா ஸ்டோர்ஸ்

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்த சமீபத்திய விளம்பரம், சமூக வலைதளத்தில் செம வைரல்.

சென்னை அண்ணா நகரில், சரவணா ஸ்டோர்ஸின் `தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ கிளை 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தக் கடையைவிடவும், அதற்காக எடுக்கப்பட்ட விளம்பரம் அதிக அளவில் பேசப்பட்டது. காரணம், அந்த விளம்பரத்தில் முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னாவுடன் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் அருள் நடித்திருந்தார். அந்த விளம்பரத்துக்கு இணையத்தில் நல்ல ரீச் கிடைத்தது. 

சரவணா ஸ்டோர்ஸ்

 

 சரவணன் அருள், அடுத்தடுத்த விளம்பரங்களில் புதுப்புது கெட்டப்புகளில் வந்து அசத்தினார். கொஞ்சம் நடனமும் ஆடினார். தற்போது,  திரைப்பிரபலங்கள் இல்லாமல் சோலோ பெர்ஃபாமென்ஸ் கொடுத்திருக்கிறார்  சரவணன்.  கோடை விற்பனைக்காக எடுக்கப்பட்ட இந்த சமீபத்திய விளம்பரத்தில், திரைப் பிரபலங்கள் இல்லை.
 

சரவணா ஸ்டோர்ஸ்


ஆறு கெட்டப்பில் சரவணன் அருள்... குழந்தைகள் பட்டாளம்... ஃபாரின் அழகிகள்... டக்கரு டக்கரு பின்னணி இசை எனப் புதிய வடிவில் உருவாகியுள்ளது. வழக்கம்போல அருளின் ஃபேன் க்ளப் இந்த விளம்பரத்தையும் இணையத்தில் செம வைரலாக்கிவிடுவார்கள்!

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க