ஹரிஷ் கல்யாணை இயக்கும் ரஞ்சித் ஜெயக்கொடி!

`புரியாத புதிர்' இயக்குநரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார்

`சிந்து சமவெளி', `பொறியாளன்', 'வில் அம்பு' ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, இவர் முகம் தமிழ்நாடு முழுக்க நன்கு தெரிய ஆரம்பித்தது. இயக்குநர் இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் `பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாகப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரைசா வில்சன் நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி உள்ள இந்தப் படம் நடந்துவரும் சினிமா ஸ்டிரைக் முடிந்த பிறகு ஜூன் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. 

 ஹரிஷ் கல்யாண்

இந்நிலையில், `புரியாத புதிர்' படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் தன்னுடைய அடுத்தபடத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கிறார். `புரியாத புதிர்' கதைக்கு நேர்மறையான சற்று வித்தியாசமான கதைக்களத்தை ரஞ்சித் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அதற்கான வேலைகள் ஸ்டிரைக் முடிந்தவுடனே ஆரம்பிக்க இருப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!