மகனை ஹாக்கி பிளேயராக்க ஆசைப்படும் ஷாரூக்கான்!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்துவிட்டாலே பிரபலங்கள் பலரும் இந்தக் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். கிரிக்கெட் ரசிகர்களைவிடவும் பாலிவுட் ஹீரோக்கள் ஐ.பி.எல் போட்டியை நேரில் பார்க்க அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.

ஷாரூக்கான்

குறிப்பாக, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் நடிகர் ஷாரூக்கான் ஆவார். ஐ.பி.எல் மேட்ச் தொடங்கப்பட்டவுடனே ஜிகுஜிகுவென ஷாரூக்கான் களமிறங்கிவிடுவார். ஆனந்த்.எல்.ராய் இயக்கும் ஜீரோ படத்தில் பிஸியாக நடித்து வரும் ஷாருக்கான். கொல்கத்தாவில் நடந்த ஐ.பி.எல் மேட்சை தனது இளைய மகன் மற்றும் மகளுடன் பார்க்க மைதானத்துக்கு நேரில் சென்றுள்ளார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம், `என் இளைய மகன் ஆப்ராமை ஹாக்கி பிளேயராக்க ஆசைப்படுகிறேன். ஆனா, அவன் கால்பந்து விளையாட்டைதான் விரும்பி விளையாடி வருகிறான்'' என்று கூறியுள்ளார். இதற்கு முன்பாக 2007-ம் ஆண்டே ஷாருக்கான் `சக் தே இந்தியா’ எனும் படத்தில் ஹாக்கி பயிற்சியாளராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!