`மெர்க்குரி' திட்டமிட்டபடி ஏப்-13 ரிலீஸ் - கார்த்திக் தரப்பு உறுதி

தமிழ் சினிமா உலகமே க்யூப் நடைமுறைக்கு எதிராகக் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்துவது, பூஜை போடுவது, ஆடியோ விழா, புதுப்பட ரிலீஸ், போஸ்ட் புரொடக்ஷன் என்று அனைத்து வேலைகளையுமே  நிறுத்திவிட்டு, தீவிரமான ஸ்டிரைக்கில் இறங்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கும் கார்த்திக் சுப்பராஜ், தனது `மெர்க்குரி' படத்தை ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸ் செய்யப்போகிறேன் என்று அறிவித்திருப்பது, சினிமா உலகைச் சேர்ந்தவர்களிடம் கருத்து வேறுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி ஏப்ரல் 13-ம் தேதி, `மெர்க்குரி' திரைப்படம் வெளிவருமா? என்று நடிகரும், கார்த்திக் சுப்பராஜின் அப்பாவுமான கஜராஜிடம் பேசினோம்.

`கார்த்திக் சுப்பராஜின் `மெர்க்குரி' படத்துக்கு வசனம், பாடல்கள் எதுவுமே கிடையாது. முழுக்க முழுக்க இசைதான் பின்னணியில் பேசும். கார்த்திக் சுப்பராஜ் படம், பிரபுதேவா நடித்திருக்கிறார் என்றாலே அது தமிழ்ப்படம் என்று எல்லோருக்கும் தெரியும். அதனால், தமிழ் மொழியில் ரிலீஸ் செய்யக் கூடாது என்று தமிழ்த் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்காக,ஏப்ரம் 13-ம் தேதி தமிழகத்தில் மட்டும் `மெர்க்குரி' ரிலீஸாகாது. தமிழகம் தவிர, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, வடநாடுகளில், ஏற்கெனவே திட்டமிட்டபடி `மெர்க்குரி' வெளியாகும்.

அமெரிக்கா, லண்டன், கனடா, சிங்கப்பூர்,  மலேசியா, துபாய்  உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் ஏப் 13-ம்தேதி `மெர்க்குரி' ரிலீஸாகும். ஏப்ரல் 12-ம் தேதி, லாஸ்ஏஞ்சல்ஸில் நடக்கும் இன்டர்நேஷன் ஃபெஸ்டிவல் விழாவின் ஸ்பெஷல் வெள்ளித்திரையில் திரையிட `மெர்க்குரி' திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. மறுநாள் இந்தியாவில் ரிலீஸ் என்பதால், லாஸ்ஏஞ்சல்ஸ் செல்லும் பயணத்தை ரத்துசெய்துவிட்டார் கார்த்திக் சுப்பராஜ். `மெர்க்குரி; ரிலீஸுக்குப் பிறகு, ரஜினி பட புராஜெக்ட்டில் தீவிரமாகக் களமிறங்கவிருக்கிறார் கார்த்தி'' என்றார்.                 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!