சினிமா ஸ்டிரைக்குக்கு முடிவு? - முத்தரப்புப் பேச்சுக்குத் தமிழக அரசு அழைப்பு  #TamilCinemaStrike

தமிழ்த் திரைத்துறையினர் நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்குத் தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

தமிழகத் திரைத்துறையினர் நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்குத் தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

சினிமா ஸ்டிரைக்

கியூப், யூ.எஃப்.ஓ என டிஜிட்டல் சினிமா சர்வீஸ் புரொவைடர்கள் வசூலிக்கும் வி.பி.எஃப் கட்டணத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆரம்பித்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், ஃபெப்ஸி நடத்தும் போராட்டத்தால் சினிமாத்துறையைச் சார்ந்த  பலத்தரப்பட்ட மக்களின் அன்றாட வேலைகள் முடங்கியுள்ளன. 

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தயாரிப்பாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதுடன், திரைத்துறைக்கென தனி வாரியம் அமைக்க வேண்டும் எனத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் இணைந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் வரும் ஏப்ரல் 17 ம் தேதி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கியூப் நிறுவனத்தார் பங்குபெரும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்த் திரையரங்க உரிமையாளர்களை நாளை (12/04/18) மாலை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!