`நமக்காகப் போராடும் போராளிகள்!’ - சத்யராஜ் உருக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தின் வெவ்வேறு இடங்களிலும் பலரும், மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களும் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் பலரும் மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களும் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

கடந்த திங்களன்று இயக்குநர் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், சேகர், ராம், சத்யராஜ், வெற்றிமாறன் உள்ளிட்டோர் சேர்ந்து  'தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை" உருவாக்கப்படுகின்றது என அறிவித்தனர். நேற்றைய முன்தினம் ஐ.பி.எல் போட்டிகளுக்காகவும், இன்று காலை மோடியின் தமிழக வருகைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி கைதானார்கள். இதில் சத்யராஜ் ஏன் கலந்துகொள்ளவில்லை என பொது வெளியில் கேள்விகள் எழுந்தன. 

சத்யராஜ் காவிரி

இந்நிலையில், இன்று காலை சிபிராஜின் ட்விட்டர் பக்கத்தில் காவிரி மேலாண்மை போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்களுக்காக ஒரு காணொளியை பதிவிட்டுள்ளார் சத்யராஜ், "எல்லாருக்கும் ஒரு குடும்பம் இருக்கு, குடும்பத்தைக் காப்பாற்ற வருமானத்தை நோக்கிய பயணம் இருக்கு. போராட்டத்தில் இருப்பவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கு, வருமானத்தை நோக்கிய பயமும் இருக்கு, ஒரு பொது நலத்துக்காக சுயநலம் கருதாமல் குடும்பத்தை மறந்து வருமானத்தைத் துறந்து நமக்காகப் போராடும் போராளிகள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்று நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் இப்படி போராடும்போது அவர்கள் கைது செய்யப்படலாம், வழக்கமான வாழ்க்கையைப் பாதிக்கும் எனத் தெரிந்தும் ஒரு பொது நலத்துக்காகப் போராடுகிறார்கள். இன்று அவர்களோட போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்பதற்காக நடந்துகொண்டிருக்கிறது. அந்தப் போராட்டக்களத்தில் இருப்பவர்கள் நம்மைவிட, என்னைவிட வீரத்திலும், தியாகத்திலும் உயர்ந்தவர்கள். அவர்களுடைய தியாகத்தையும் வீரத்தையும் நான், நாம் வாழ்த்த முடியாது போற்ற முடியும்; வணங்க முடியும். அவர்களை நான் போற்றுகிறேன். வணங்குகிறேன்" என்று அந்த வீடியோவில் பதிவிட்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!