``நடிக்கிற வேலையே வேண்டாம் சாமி..!'' - `சிங்கம்' ஹரி

``நடிக்கிற வேலையே வேண்டாம் சாமி..!'' - `சிங்கம்' ஹரி

சினிமா இயக்குநர்கள் நடிப்பு அவதாரம் எடுத்துக்கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பாரதிராஜா, ஆர்.சுந்தர்ராஜன், ராஜ்கபூர், சேரன், சுந்தர்.சி, மிஷ்கின், சுசீந்திரன் என்று லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. விக்ரம், சூர்யாவை வைத்து கமர்ஷியலாக  ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் ஹரியிடம் நீங்கள் நடிக்கவில்லையா? என்கிற கேள்வியை முன் வைத்தோம்.

ஹரி

''நான் சரண்சாரிடம் உதவி டைரக்டராக வேலை செய்தபோது  'அமர்க்களம்' படத்தில் அஜித் செல்லும் மாருதி காரை ஓட்டும் டிரைவராக நடித்தேன். அதன்பின் அசிஸ்டென்ட் டைரக்டராக இருக்கும்வரை சின்னச் சின்ன வேடங்களில் தலையைக் காட்டினேன். முதன்முதலாக `தமிழ்' படத்தை இயக்கிய பிறகு, நடிப்பு வேலைக்கு முழுக்கு போட்டேன். `சிங்கம்' படத்தை இயக்கியபோதும், இப்போதும் முக்கியமான கேரக்டர்களில் நடிப்பதற்கு என்னுடைய டைரக்டர் நண்பர்கள் அழைத்து வருகின்றனர். நான்தான் 'நடிக்கிற வேலையே வேண்டாம் சாமி' என்று கையெடுத்துக் கும்பிட்டு வழியனுப்பி வைத்தேன். ஒரு படத்தை இயக்கும்போது அதற்கான எல்லா வேலைகளையும் டைரக்டர்தான் பார்க்க வேண்டும். அந்தச் சுகமான சுமை ஒன்றே எனக்குப் போதும் ஆளைவிடுங்க’' என்று விடைகொடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!