Published:Updated:

கொடி கடத்திய சச்சின்!

சார்லஸ்

கொடி கடத்திய சச்சின்!

சார்லஸ்

Published:Updated:
##~##

• இந்திய ரேஸிங் துறைக்கு இது மைல்கல் சீஸன்! முதல்முறையாக இந்தியாவில் நடந்து முடிந்திருக்கிறது ஃபார்முலா-1 கார் ரேஸ். டெல்லி அருகே நொய்டாவில் கட்டப்பட்ட புத்தம் புதிய 'புத் இன்டர்நேஷனல் ரேஸ் டிராக்’கில் நடைபெற்ற இந்தியாவின் முதல் சர்வதேச கார் ரேஸைக் காணத் திரண்ட ரசிகர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 லட்சம்!

• 5.14 கி.மீ. நீளமுள்ள ரேஸ் டிராக் அமைக்க ஸ்வாஹா செய்யப்பட்ட நிலம் 875 ஏக்கர்!

கொடி கடத்திய சச்சின்!

1,700 கோடி செலவில் கடந்த நான்கு வருடங்களாக 300 இன்ஜினீயர்கள், 5,000 பணியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த ரேஸ் டிராக்கை வானத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு பெண் அமர்ந்திருப்பதுபோல இருக்குமாம். ஃபார்முலா-1 காரில் 80 ஆயிரம் உதிரிபாகங்கள் உள்ளன. மணிக்கு 300 கி.மீ. வேகம் பறக்கும் இந்த கார்கள், பிரேக்கை அழுத்தினால் நான்கே விநாடிகளில் முழுவதுமாக நின்றுவிடும்.

கொடி கடத்திய சச்சின்!

• ரேஸைக் காண சச்சின், ஷாரூக், விஜய் மல்லையா எனப் பிரபலங்கள் அனைவருமே டெல்லிக்குத் தனித் தனி விமானங்களில் வந்திருந்தனர். 40 தனியார் விமானங்கள் வந்ததால், டெல்லி விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்த பார்க்கிங் இடம் கிடைக்கவில்லையாம். இந்தியாவில் விளையாட்டு மைதானங்களையும் நாய்களையும் பிரிக்கவே முடியாது. கிரிக்கெட் மைதானங்களில் நாய்கள் ஓடுவதைப் பார்த்திருப்போம். அதேபோல் ரேஸுக்கு முந்தைய நாள் நடைபெற்ற பயிற்சியின்போது இந்திய ரேஸ் டிராக்கிலும் ஒரு நாய் குறுக்கே ஓட... அதிர்ந்து விட்டார்கள் ரேஸர்கள். 'அட! இந்தியாவில் இதெல்லாம் ஒரு பிரச்னை இல்லை!’ என்று சமாதானம் சொல்லப்பட்டு, நாய் விரட்டப்பட்டு மீண்டும் பயிற்சி ஆரம்பமானது!

• ஏற்கெனவே, இந்த ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்ட செபாஸ்டியன் வெட்டல்தான் இந்திய ரேஸிலும் வெற்றிபெற்றார். மொத்தம் 60 லேப்புகள் அதாவது, 320 கி.மீ. பந்தய தூரத்தை 1 மணி நேரம் 30 நிமிடங்களில் கடந்து வென்றார் செபாஸ்டியன் வெட்டல். வெற்றியை அறிவிக்க காட்டப்படும் கறுப்பு - வெள்ளைக் கொடியை அசைத்து, செபாஸ்டியன் வெட்டலின் வெற்றியை அறிவித்தார் சச்சின் டெண்டுல்கர். அதன் பிறகு, அந்தக் கொடி சச்சின் வீட்டுக்கு பார்சல்!

கொடி கடத்திய சச்சின்!

• ஜெர்மனியைச் சேர்ந்த செபாஸ்டியன் வெட்டல்தான் உலகிலேயே மிகவும் குறைந்த வயதில் கார் ரேஸ் சாம்பியன் பட்டம் வென்றவர். கடந்த ஆண்டு ஃபார் முலா-1 சாம்பியன் பட்டத்தை வெல்லும்போது செபாஸ்டியன் வெட்டலுக்கு வயது 22. ஏழு முறை கார் ரேஸ் சாம்பியன் பட்டம் வென்ற மைக்கேல் ஷூமேக்கர் இந்த ஆண்டு பெரிய அளவில் வெற்றிகள் பெறவில்லை. ஆனால், இந்திய ரேஸ் டிராக்கில் ஷூமேக்கர் இந்திய ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்தார். ஒன்பது, பத்தாவது இடங்களைப் பிடித்துக்கொண்டு இருந்த ஷூமேக்கர், இந்திய ரேஸில் ஐந்தாவது இடம் பிடித்தார். இந்தியா வின் நரேன் கார்த்திகேயனுக்கு 17-வது இடமே கிடைத்தது!