''கேக்குறது கேக்குறீங்க.. வெவ காரம் இல்லாத கேள்வியா கேளுங்க!'' - சிரிக்கிறார் அருள்நிதி.

''டான்ஸ் கிளாஸ்ல இருந்தேன். அதான் கால் மிஸ் ஆகிடுச்சு. இப்போ கேளுங்க... என்ன வேணும்?'' -ஆர்வமாகிறார் இனியா.

''மதியச் சாப்பாட்டை முடிச்சுட்டு இப்போதான் கை கழுவுறேன். சாப்பிட்ட தெம்போடு பதில் சொல்லிடுறேன்!'' -ஆயத்தமாகிறார் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா.

''கேரளாவுக்கு வந்திருக்கேன்... அதனால தமிழ்நாட்டுல என்ன டாபிக்கல்னு தெரியாது. ஆனாலும், கேளுங்க!'' -சமாளிக்கிறார் அபிதா.

''கட்சிக்காரங்க கல்யாணத்துல இருக்கேன். 10 நிமிஷத்துல நானே உங்க லைன்ல வரேங்க!'' - சொன்னபடியே வந்தார் மதுரை மேயர் ராஜன் செல்லப்பா.

ட்ராய் என்றால் என்ன?

பதில்: டெலிகாம் ரெகுலேட்டரி அத்தாரிட்டி ஆஃப் இந்தியா.

அருள்நிதி: ''இந்திய தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையம் என்பதோட சுருக்கம்... சரிங்களா?''

இனியா: ''ட்ராய்னா..? ட்ரைபல் மக்கள் பத்தி ஆராயற அமைப்பு. ஓ.கே-வா?''

ஆதவன் தீட்சண்யா: '' 'டெலிபோன் ரெகுலாரிட்டி அத்தாரிட்டி ஆஃப் இந்தியா’... என்ன அசந்துட்டீங்களா? நான் 'பி.எஸ்.என்.எல்’-லதானே வேலை பார்க்குறேன்!''

அபிதா: ''என்னது டாயா? கரடிப் பொம்மை!''

ராஜன் செல்லப்பா: ''டெலிபோன் ரெக்கவரி ஆக்ட்!''

இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?

பதில்: ஹாக்கி

அருள்நிதி: ''ஹாக்கி!''

இனியா: ''ஃபுட்பால். சரிதானே... இல்ல... இல்ல... கிரிக்கெட். இது ரெண்டுல ஒண்ணுதான்!''

ஆதவன் தீட்சண்யா: ''நியாயப்படிப் பார்த்தா கபடிதாங்க!''

அபிதா: ''ஹாக்கி... நாம ஸ்போர்ட்ஸ்ல கில்லிங்க!''

ராஜன் செல்லப்பா: ''கேள்வி எல்லாம் பயங் கரமா இருக்குங்களே... ஹாக்கிதானே?''

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் யார்?

பதில்: வி.பி.துரைசாமி

அருள்நிதி: ''வி.பி.துரைசாமி அண்ணன். ரொம்ப ஓவருங்க. எங்க கட்சியில என்ன நடக்குதுனுகூடவா எனக்குத் தெரியாது?''

இனியா: ''எனக்கு தமிழ்நாட்டு பாலிடிக்ஸ்ல ஜெயலலிதா, கருணாநிதி ரெண்டு பேரை மட்டும்தான் தெரியும். கண்டிப்பா அவங்களா இருக்க மாட்டாங்க. வேற யாருங்க?''

ஆதவன் தீட்சண்யா: ''வி.பி.துரைசாமி.''

அபிதா: ''புதுசா நியமிச்சிருக்காங்களா? கேரளாவுல இருக்கேனா... அதான் தமிழ்நாட்டுல என்ன நடந்துச்சுனு தெரியலை!''

ராஜன் செல்லப்பா: ''நல்லாத் தெரியுமே... துணை சபாநாயகராக இருந்த வி.பி.துரை சாமி!''

சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள்களின் பெயர்கள் என்னென்ன?

பதில்: வித்யாராணி, பிரபா விஜயலட்சுமி.

அருள்நிதி: ''ஏங்க எனக்கும் வீரப்பனுக்கும் என்னங்க சம்பந்தம்?''

இனியா: ''சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பத்தி நெறைய படிச்சிருக்கேன். அவரோட வொய்ஃப் ருக்மணிதான் அடிக்கடி மீடியால வருவாங்க. ஆனா, பொண்ணுங்க பத்தி நோ ஐடியா!''

ஆதவன் தீட்சண்யா: ''ரெண்டு பொண்ணுங்களும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. பேரு வாயிலயே இருக்குது... வர மாட்டேங் குதே!''

அபிதா: ''வீரப்பனோட பொண்டாட்டி பேரு வீரலட்சுமினு தெரியும். பொண்ணுங்க பேரு தெரியலைங்களே!''

ராஜன் செல்லப்பா: ''ரெண்டு பொண்ணுங்கனு படிச்சிருக்கேன். பேரு ஞாபகத்துல வரலையே!''

'வேலாயுதம்’ படத்தில் விஜய் எத்தனை கி.மீ. ஸ்பீடில் போகும் ரயிலை பிரேக் போட்டு நிறுத்துவார்?

பதில்: 160 கி.மீ.

அருள்நிதி: ''ஏதாவது சிக்கல்ல மாட்டி விட்டுறாதீங்க... 80 கி.மீ. வேகம்னு நினைக் கிறேன்!''

இனியா: ''படம் பார்க்கலை. எப்படியும் டிரெய்ன் 200 கி.மீ. ஸ்பீடைத் தாண்டிப் போகும்ல?''

ஆதவன் தீட்சண்யா: ''படம் எப்படிங்க இருக்குது? நான் இன்னும் பார்க்கலை. விஜய் ரயில் டிரைவரா நடிச்சிருக்காரா என்ன?''

அபிதா: ''என்னது... இளைய தளபதி டிரெய்னை நிறுத்துறாரா? அப்போ கண்டிப்பா பார்க்கணுமே. கேரளாவுல ரிலீஸ் ஆயிடுச்சான்னே தெரியலையே?''

ராஜன் செல்லப்பா: '' 'வேலாயுதம்’ படத் தைப் பார்த்துட்டு, இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவா?''

சமீபத்திய தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மேயர்களுள் எத்தனை பேர் பெண்கள்?

பதில்: 6

அருள்நிதி: ''மூணுன்னு நெனைக்கிறேன். நம்ம கட்சிதான் ஒண்ணும் ஜெயிக்கலையே. அது எத்தனையா இருந்தா என்னங்க?''

இனியா: ''மறுபடியும் பாலிட்டிக்ஸா.. ட்ரை பண்றேன். ம்... எட்டுனு போட்டுக்கங்க!''

ஆதவன் தீட்சண்யா: ''திருநெல்வேலி... திருச்சி... இன்னும் ஒண்ணு எந்த ஊருன்னு தெரியலை. மொத்தம் மூணு!''

அபிதா: ''மறுபடியும் சொல்றேன்... நான் கேரளா வந்து 10 நாள் ஆகுது. அதனால தமிழ்நாட்டு சமாசாரம் நான் அறிஞ்சல்லோ!''

ராஜன் செல்லப்பா: ''ஆறு. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரே முதல்வர் எங்கள் புரட்சித்தலைவி அம்மாதான்! எனக்கு எவ்வளவு மார்க் போடுவீங்க?''