Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

• புதுப்புது மொபைல் போன்கள் வாங்குவது இலியானாவின் ஹாபி. பிளாக்பெரி, ஐ-போன், ஆண்ட்ராய்டு டெக்னாலஜி போன்கள் என ஏகப்பட்ட மொபைல்களைக் கையில் வைத்திருக் கும் இலியானாவின் எல்லா செல்போன் நம்பர் களின் இறுதி எண் 1. செல்லமே 'செல்’லம்!

இன்பாக்ஸ்

• ஈவா கிரீன், நவோமி ஹாரிஸ், ஃபிரீடா பின்ட்டோ என நீண்டுகொண்டே போன ஜேம்ஸ் பாண்ட் நாயகிகள் லிஸ்ட்டில் இறுதியாக டிக் செய்யப்பட்டு இருப்பவர்... மார்க்கரிட்டா லெவிவா. 'ஸ்பிரிட்’, 'லிங்க்கன் லாயர்’ போன்ற படங்களில் நடித்த ரஷ்ய அழகி. ''பேரழகி, அதே சமயம் ஆக்ஷனிலும் கலக்குவார்'' என 31 வயது மார்க்கரிட்டாவுக்கு சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறார் ஜேம்ஸ் பாண்ட் பட இயக்குநர் சாம் மெண்டிஸ். பார்த்துருவோம்!

இன்பாக்ஸ்

•  ''என் மனதை மார்லன் பிராண்டோ புரிந்துகொள்கிறான். என் வாழ்க்கை யில் நடக்கும் அத்தனை விஷயங்களை யும் அவனுடன் பகிர்ந்துகொள்கிறேன். அவன் எப்போதுமே என்னை ஏமாற்ற மாட்டான்'' என்று பேட்டி ஒன்றில் உருகினார் பிரியங்கா சோப்ரா. மார்லன் பிராண்டோ என்பது பிரியங்காவின் செல்ல நாய். நடிகைகளுக்கு நாய்கள் மீது அப்படி என்னதான் பிரியமோ?

இன்பாக்ஸ்

•  16 கோடியில் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டில் உற்சாகமாக தீபாவளி கொண்டாடினார் தீபிகா படுகோன். ''அப்பா பிரகாஷ், அம்மா உஜ்வானி, தங்கை அனிஷா, நான் தீபிகா என நான்கு பேரின் பெயர்களுமே ஒளியைக் குறிப்பவை. அதனால், தீபாவளி அன்று வீடு முழுக்க விளக்குகளை ஜொலிக்க விட்டோம்'' என்கிறார். ஒளியே... ஒளியின் மகளே!

இன்பாக்ஸ்

• டைட்டானிக் 3டி படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகிறது. எடுத்த படத்தை அப்படியே 3டி-க்கு மாற்றுவதால் பட்ஜெட் எகிறுகிறதாம். தற்போது படத்தின் 18 நிமிடங்கள் மட்டுமே 3டி-யில் மாற்றப்பட்டு இருக்கிறது. இதற்கு மட்டும் ஆன செலவு எவ்வளவு தெரியுமா?

இன்பாக்ஸ்

87 கோடி. காசைக் கொட்டி கடல்ல மூழ்கடிக்கப்போறீங்க!

இன்பாக்ஸ்

•  டாப் டென் பணக்கார இந்தியர்கள் லிஸ்ட்டில் முதல்முறையாக ஒரு பெண் முகம்.

இன்பாக்ஸ்

47 ஆயிரத்து 500 கோடி சொத்து மதிப்போடு ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறார் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் சாவித்ரி ஜிண்டால். சறுக்கல்களைச் சந்தித்தா லும் வழக்கம்போல் முதல் இடத்தில் இருப்பது முகேஷ் அம்பானி. அனில் அம்பானிக்கு டாப் டென்னில் இடமே இல்லை. அண்ணன் ஆகாசம்... தம்பி பாயாசம்!

இன்பாக்ஸ்

•  சர்வதேசப் போட்டிகளில் 200 கோல்களை அடித்து சாதனை படைத்திருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கடந்த வாரம் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடியபோது இந்த சாதனையைப் படைத்தார் ரொனால்டோ. இதில் ஹாட்ரிக் கோல்களும் அடக்கம்.  நீ நதிபோல ஓடிக்கொண்டிரு!

இன்பாக்ஸ்

• தீபாவளி அன்று தனது 20-வது பிறந்த நாளைக் கொண்டாடினார் அமலா பால். பார்ட்டியின் தீம் கலர் கறுப்பு என்பதால், எல்லோருமே கறுப்புஉடை யில் வந்து கலக்கினார்கள். பார்ட்டியில் கலந்துகொண்ட ஒரே நடிகர் விக்ரம். அமலா... நீ பிறந்தால் தீபாவளி!

•  ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 'செத்தும் கொடுக்கும் செலிபிரிட்டி கள்’ பட்டியலில் இந்த வருடமும் முதல் இடத்தில் இருப்பது மைக்கேல் ஜாக்சன். கடந்த வருடத்தில் ஜாக்சனின் இசை ஆல்பங்கள் மட்டும் 170 மில்லியன் டாலர்களை வசூல் செய்து கொடுத்து இருக்கிறது. மரணத்தை வென்ற வசூல் ராஜா!

• அமீர் கான், சல்மான் கான், அக்ஷய் குமாரைத் தொடர்ந்து தமிழ்ப் பட இந்தி ரீ-மேக்கில் நடிக்கும் அடுத்த ஸ்டார்... ஹ்ரித்திக் ரோஷன். 'பிதாமகன்’ இந்தி ரீ-மேக்கில் விக்ரம் கேரக்ட ரில் ஹ்ரித்திக் ரோஷனும் சூர்யா கேரக்டரில் சையிஃப் அலிகானும் நடிக்கிறார்கள். லைலாவாக நடிக்க இருப்பது கரீனா கபூர். கொரவளையக் கடிப்பீங்களா ஹ்ரித்திக்?

இன்பாக்ஸ்

• அமெரிக்காவின் லூசியானா மாநில கவர்னராக இரண்டாவது முறையாக வெற்றிபெற்றிருக்கிறார் பாபி ஜிந்தால். 40 வயது இந்தியரான பாபி ஜிந்தால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் 54 சதவிகித வாக்குகள் பெற்றார். இந்த முறை ஜிந்தால் பெற்றது 66 சதவிகித வாக்குகள். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஒபாமா கட்சி வேட்பாளர் பெற்றது 19 சதவிகித வாக்குகள் மட்டுமே. இந்தியேன்டா!

• போர்க் குற்றத்துக்காகப் பல நாடுகளிலும் ராஜபக்ஷே மேல் வழக்குகள் பதிவாகி வரும் நிலையில், கடாஃபி கொல்லப்பட்டதற்கு எதிராக சர்வதேச விசாரணை கேட்டுக் குரல் கொடுத்துஇருக்கிறார் ராஜபக்ஷே. இலங்கை நாடாளுமன்றத்தில் கடாஃபி கொல்லப்பட்டதற்கு எதிராக கண்டனத் தீர்மானம்  நிறைவேற்றி இருக்கிறார். பரமனுக்கு மரண பயத்தைக் காட்டிட்டாங்கடா!