`மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் `காளி'. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக 4 நாயகிகள் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்னும் வெளிவராத நிலையில் விஜய் ஆண்டனியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி

`மூடர்கூடம்' இயக்குநர் நவீன் எடுக்கவிருக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை `அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிக்கவுள்ளார். சினிமா ஸ்ட்ரைக் முடிந்திருக்கும் நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் ஆரம்பமாகிறது. மேலும், படத்துக்கான பெயர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. தனது படங்களுக்கு வித்தியாசமான பெயரை விஜய் ஆண்டனி வைத்து வருவதும், மூடர் கூடம் படம் மூலம் கவனம் ஈர்த்த நவீன் ஆகியோர் இணைவதே படத்தின் பெயருக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. 'படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும்  டெக்னீஷியன் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. படத்துக்கான இசையும் விஜய் ஆண்டனி அமைப்பாரா இல்லை வேறு யாராவது என்றும் தெரியவில்லை. இதற்கிடையில், விஜய் ஆண்டனியின் `காளி' படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையைச் சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!