26 வயது விமானப் பணிப்பெண்ணை மணந்த 52 வயது பிரபல இந்தி நடிகர்! வைரலான நடன வீடியோ

52 வயதாகும் பிரபல இந்தி நடிகர் மிலிந்த் சோமன் 26 வயதான விமான பணிப்பெண்ணை மணந்துள்ளார். 

மிலிந்த் சோமன்

பிரபல இந்தி நடிகர் மிலிந்த் சோமன். மாடலாக  வாழ்க்கையைத் தொடங்கிய இவர் பிற்காலத்தில் நடிகராக உருவெடுத்தார். இதுவரை சுமார் 50 படங்கள் வரை நடித்துள்ள சோமன், தமிழில் பச்சைக்கிளி  முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே, மிலன் என்ற பிரெஞ்ச் நடிகையைத் திருமணம் செய்திருந்த நிலையில், 2009-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். பின்னர் படங்களில் கவனம் செலுத்தி வந்த சோமன், சமீபத்தில் விமானப் பணிப்பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில், நேற்று தனது காதலி அங்கீதா கன்வாரை கரம்பிடித்துள்ளார் சோமன். மும்பை அலியாபக் என்ற இடத்தில் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தது. அங்கீதா அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அசாம் மக்கள் மரபுப்படி திருமணம் நடந்தது. அங்கீதாவுக்கு 26 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக திருமணத்துக்கு முன் நடந்த மெஹந்தி நிகழ்ச்சியில் மணமக்கள் இருவரும் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!